வேலூர் மாவட்டத்தில் காவல்துறை சார்பில் சிறப்பு குறைதீர்வு முகாம்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 3 உட்கோட்டத்தில் சிறப்பு குறைதீர்வு முகாம் காவல்துறை சார்பில் நடத்தப்பட்டது பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு மனுக்களை அளித்து தீர்வு கண்டனர்
வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்களின் குறைகளை தீர்க்க ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையன்று வேலூர் மாவட்ட எஸ்பி மணிவண்ணன் தலைமையில் குறைதீர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது
பொதுமக்களின் குறைகள் மனுக்களாக பெறப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு குறைகள் தீர்க்கப்பட்டு வருகின்றது. இதனையாடுத்து வேலூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் நீண்ட நாட்கள் கிடப்பில் உள்ள வழக்குகளில் தீர்வு காண்பதற்காக வேலூர், காட்பாடி, குடியாத்தம் ஆகிய உட்கோட்டங்களில் சிறப்பு குறைதீர்வு முகாம் இன்று நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் குறைகள் விரைந்து தீர்க்க சிறப்பு பொதுமக்கள் குறைவு முகாம் நடத்தப்பட்டது இதில் வேலூர் உட்பட்டத்தில் 119 மனுக்கள் பெறப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு அதில் 80 மனுக்கள் முடித்து வைக்கப்பட்டது.
காட்பாடி உட்கோட்டத்தில் 310 மனுக்கள் பெறப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு அதில் 103 மனுக்கள் முடித்து வைக்கப்பட்டது மற்றும் குடியாத்தம் உட்கோட்டத்தில் 160 மனுக்கள் பெறப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு 160 மனுக்களும் முடித்து வைக்கப்பட்டது மாவட்ட முழுவதும் மொத்தமாக 589 மனுக்கள் பெறப்பட்டு அதில் 343 மனுக்கள் முடித்து வைக்கப்பட்டது.
மேலும் நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் உரிய விசாரணை நடத்தப்பட்டு பொதுமக்களின் குறைகள் தீர்க்கப்படும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.