BREAKING NEWS

வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும் நிலக்கோட்டை பகுதி விவசாயிகள் கோரிக்கை.

வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும் நிலக்கோட்டை பகுதி விவசாயிகள் கோரிக்கை.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள வைகை அணையில் இருந்து தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு முக்கிய விளங்கக்கூடியது வைகை அணையாகும். இந்த வைகை அணையில் இருந்து வருடம் தோறும் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் வழங்குவது வழக்கம்.

 

அதன்படி வருடம் தோறும் கிடைக்கப்பெறும் தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்து கொள்ளலாம் என்று திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள ரொங்கப்ப நாயக்கன்பட்டியில் தொடங்கி குன்னுவாரன்கோட்டை வழியாக வைகை ஆற்று படுகை ராமராஜபுரம் கிராமத்தில் முடிவடைகிறது.

 

இந்த வைகை ஆற்று படுகைய ஒட்டியுள்ள விவசாயிகள் கடந்த 2 மாதத்திற்கு முன்பு நெற்பயிர்களை சாகுபடி செய்தனர். அவ்வாறு சாகுபடி செய்த பயிர்களுக்கு தற்போது தண்ணீர் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

 

இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் திண்டுக்கல் மாவட்டத்திற்கு போதுமான தண்ணீர் வழங்கப்பட்டதாக ஒரு தகவல் காட்டு தீ போன்று நிலக்கோட்டை பகுதி விவசாயிகளுக்கு கிடைத்தது. இவனை அறிந்த விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்து தமிழக அரசுக்கு உடனடியாக முறை வைத்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

தற்போது பயிர் விலையும் தருவாயில் இருப்பதால் தண்ணீர் விடவில்லை என்றால் நெற்பயிர்கள் காய்ந்து போகும் அதனால் நெல்மணிகள் கிடைக்க வாய்ப்பில்லை எனவே தமிழக அரசு உடனடியாக இது தலையிட்டு முறையாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளா ம.ராஜா.

CATEGORIES
TAGS