ஸ்ரீ ஐயப்ப சுவாமி ஆலய கும்பாபிஷேகத்திற்கு இஸ்லாமியர்கள் மங்கள வாத்யங்கள் இசையுடன் யாகசாலைக்கான பூஜை பொருட்கள் எடுத்து வந்து வழங்கிய அதிசயம்..

தஞ்சை மாவட்டம், மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக, தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் நடந்த ஸ்ரீ ஐயப்ப சுவாமி ஆலய கும்பாபிஷேகத்திற்கு இஸ்லாமியர்கள் மங்கள வாத்யங்கள் இசையுடன் யாகசாலைக்கான பூஜை பொருட்கள் எடுத்து வந்து வழங்கினார்கள். அவர்களை கோவில் நிர்வாக ஐயப்ப பக்தர்கள் சந்தனம் கொடுத்து வரவேற்றனர்.
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் 70 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக எழுப்பப்பட்ட ஸ்ரீ ஐயப்ப சுவாமி ஆலயம் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைப்பெற்றது. முன்னதாக நடைப்பெற்ற 4ம் கால யாகசாலை பூஜைக்காக பழங்கள், யாகசாலை பொருட்களை ஆகியவற்றை இஸ்லாமியர்கள் மங்கள வாத்யங்கள் இசையுடன் கழுத்தில் செவ்வந்தி மாலை அணிந்து ஊர்வலமாக ஆலயத்திற்கு எடுத்து வந்தனர்.
அவர்களை கும்பாபிஷேக குழுவினர் வரவேற்று, அமர வைத்து சந்தனம் வழங்கினார்கள். இஸ்லாமியர்கள், இந்துக்கள் மத நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகின்றனர் என்பதற்கு இந்த நிகழ்வு சான்றாக அமைந்தது.