ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஜெய் ராம் சேவா சங்கம் சார்பில் வெள்ளி வேல் பூஜை: ஸ்ரீ சக்தி அம்மா பங்கேற்பு!

02.01.2026 காலை, அருள்மிகு வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடம் நிறுவனர், ஸ்ரீ சக்தி அம்மாவின் 50வது ஜெயந்தி பொன் விழாவை முன்னிட்டு, ஜெய் ஸ்ரீராம் சேவா சங்கம் சார்பில், வேலூர் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற வெள்ளி வேல் பூஜையில், இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டார்.

அவருடன் முன்னாள் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

சேவை, தியாகம், ஆன்மிக அர்ப்பணிப்பின் அடையாளமாக விளங்கும், ஸ்ரீ சக்தி அம்மாவுக்கு, வெள்ளி வேல் வழங்கி கௌரவித்தனர்.

கல்வி, மருத்துவம், ஆன்மீகம், சுற்றுச்சூழல் என மனிதநேயத்தை வழிகாட்டியாகக் கொண்டு பொதுமக்களுக்குச் சேவையாற்றி வரும் ஸ்ரீ சக்தி அம்மாவின் அறப்பணி, மேலும் பல்லாண்டுகள் தொடரும் என விழாவில் கலந்து கொண்டவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டனர்.
TAGS Bjpஅண்ணாமலைஅரசியல்ஆன்மிகம்சக்தி அம்மாஜலகண்டேஷ்வரர் ஆலயம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்பாஜகமுக்கிய செய்திகள்வேலூர்வேலூர் மாவட்டம்ஸ்ரீபுரம் நாராயணி கோவில்
