BREAKING NEWS

ஒரே நாடு ஒரே தேர்தல் போல ஒரே நாடு ஒரே விலை கொண்டு வர வேண்டும் : தமிழ்நாடு நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம்

ஒரே நாடு ஒரே தேர்தல் போல ஒரே நாடு ஒரே விலை கொண்டு வர வேண்டும் : தமிழ்நாடு நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம்

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் போல ஒரே நாடு ஒரே விலையை கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமும் சார்பில் எழுச்சிதின கருத்தரங்கம் நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளமான விநியோகஸ்தர்கள் பங்கேற்றனர்.

அப்போது தமிழ்நாடு நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் நலனை வலியுறுத்தியும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வெங்கடேசன், “நாடு முழுவதும் மக்களுக்கு தேவையான பொருட்களை வியாபாரம் மூலம் நாங்கள் கொண்டு சேர்க்கிறோம். பாரம்பரியமாக இருக்கும் எங்களை போன்ற நுகர்பொருள் விநியோகஸ்தர்களுக்கும் தற்போது வந்துள்ள அதிவிரைவு வணிகம் என்ற காப்பு நிறுவனங்களுக்கும் விலையில் மாற்றம் செய்து தயாரிப்பு நிறுவனங்கள் அளிக்கின்றன. இதனை மத்திய மாநில அரசுகள் தடுக்க வேண்டும்.

விலையில் மாற்றம் வைத்துக் கொடுப்பதால் எங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் போல ஒரே நாடு ஒரே விலை என்ற திட்டத்தை அரசு கொண்டு வர வேண்டும்.

இந்தியா முழுவதும் மக்களுக்கு தேவையான பொருட்களை 90% நாங்கள் தான் கொண்டு சென்று சேர்க்கிறோம். ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனங்களின் பொருட்களையும் சிறிய வியாபாரிகளுக்கு கடனாக அளித்து நாங்கள் தான் அந்த பொருட்களை மக்களிடம் சேர்க்கிறோம். எங்களது கோரிக்கையை ஏற்காவிட்டால் விலையை குறைத்து எங்களுக்கு வழங்காத கார்ப்பரேட் நிறுவனங்களின் தயாரிப்பு பொருட்களை நிராகரிப்போம். அதுமட்டுமின்றி மக்களிடமும் பொருட்களைக் கொண்டு சேர்ப்பதை நிறுத்துவோம். கார்ப்பரேட் நிறுவனங்கள் 10 சதவீதம் தான் மக்களுக்கு பொருட்களை விநியோகம் செய்கிறார்கள். 90% விநியோகம் செய்யும் நாங்கள் நிறுத்திவிட்டால் நாட்டில் திண்டாட்டம் ஏற்பட்டுவிடும். இதனை கவனத்தில் கொண்டு எங்கள் கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும். எங்கள் கோரிக்கையை ஏற்று யார் 2026 தேர்தலில் தேர்தல் அறிக்கையில் எங்கள் கோரிக்கையை வெளியிடுகிறார்கள் அவர்களுக்குத்தான் தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் சங்கங்களின் வாக்குகள் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.

CATEGORIES
TAGS