கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்கொலை செய்ய முற்பட்ட பெண்ணை காப்பாற்றிய இரவு ரோந்து காவலர்கள்

நாகர்கோவில் அருகே நள்ளிரவில் தற்கொலை செய்ய முற்பட்ட பெண்ணை காப்பாற்றிய இரவு ரோந்து காவலர்கள்-பெண்ணின் மனதை மாற்றி மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கண்டன்விளை பகுதியில் ரெட்லின் சிமி என்ற பெண்ணிற்கு திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் உள்ளன, அவர்கள் இருவரும் 15வயதை கடந்தவர்கள் என கூறப்படுகிறது, இந்நிலையில் ரெட்லின் சிமியின் கணவர் மற்றும் கணவரின் சகோதரி ஆகியோர் கூட்டாக சேர்ந்து தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், அடித்து காயப்படுத்தி வருவதாகவும் இரணியல் காவல்நிலத்தில் புகார் அளித்துள்ளனர்,
ஆனால் போலீசார் தனக்கு நியாயம் பெற்று தரவில்லை என கூறப்பட்ட நிலையில் நேற்று அப்பெண்ணை உறவினர்கள் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர்,
இதனால் கோபம் அடைந்த ரெட்லின் சிமி, தனக்கு நீதி கிடைக்க வில்லை என்று, தான் தற்கொலை செய்யப் போவதாக கூறி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார், இந்நிலையில் நள்ளிரவு ஒன்றரை மணியளவில் சாலையில் சுற்றித்திரிந்த ரெட்லின் சிமியை இரவு ரோந்து பணியில் இருந்த போலீசார் பார்த்து விசாரித்ததில் அவர் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது,
உடனடியாக நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் வின்சென்ட் அன்பரசி மற்றும் ஆசாரிப்பள்ளம் நைட் ரவுண்ட்ஸ் ஆபிஸர். தலைமைக் காவலர் ஸ்ரீதரன்,ஆசாரிபள்ளம் மருத்துவமனை இன்சார்ஜ், சோகன்ராஜ்,அஜித்குமார், சதிஷ்குமார் மற்றும் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் அப்பெண்மணியை விசாரித்து அறிவுரை கூறி மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்,மேலும் இச்சம்பவம் நள்ளிரவு நேரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
