“கற்றல் சிரமத்தை சமாளிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் கற்றலை வளப்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றிய திறன் வளர்ப்பு திட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி..
கன்னியாகுமரி மாவட்டம் திருச்சிலுவைக் கல்லூரி (தன்னாட்சி) சமூக பணித்துறை மாணவிகள் செல்வி ஷாரோன் செல்வ கிறேஸ் மற்றும் ஜோனிஷா இனணந்து “கற்றல் சிரமத்தை சமாளிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் கற்றலை வளப்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றிய திறன் வளர்ப்பு திட்டம்” என்ற தலைப்பில் திறன் மேம்பாட்டு முகாம் குண்டல் கன்னியாகுமரியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் வைத்து நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் எம்.ஜே. ஆஃனஸ் கிரிஸ்டினா எம்.எஸ்.டபிள்யூ., எம்பிஏ அவர்கள் கலந்து கொண்டு கற்றல் சிரமத்தை சமாளிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் கற்றலை வளப்படுத்துவதற்கான வழிமுறைகளை தெளிவாக விளக்கினார்.
மேலும் கற்றல் திறனை வளப்படுத்த பல செயல் முறைகளை பயிற்சி மூலமாய் எளிதாக எடுத்துரைத்தார். இப்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதில் பல மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.