முக்காணியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல்..!

முக்காணியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல்..!

தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில் ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.

 

கோடையின் வெப்பத்தை தணிப்பதற்காக பொதுமக்களுக்கு நீர் மோர், குளிர்பானம், தர்பூசணி இலவசமாக வழங்குவதற்காக திமுக சார்பில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டு வருகின்றன.

 

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில் திமுக சார்பில் நடந்த தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கோட்டாளம் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.

 

நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத்தலைவர் மாரியப்பன், ஏரல் நகரச் செயலாளர் ராயப்பன், துணைச் செயலாளர் அருணா, முக்காணி கிளைச் செயலாளர்கள் நட்டார், சுதர்சன், சுப்பிரமணியன், மாரிமுத்து, பழைய காயல் கிளைச் செயலாளர் ஜான்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS