வாசுதேவநல்லூரில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது

தென்காசி மாவட்டத்தில் தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, சிறப்பு மருத்துவ மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள் சார்பாக
வாசுதேவநல்லூர் சுற்று வட்டாரங்களை சார்ந்த தாய்மை பருவத்திற்கு தயாராக உள்ள அனைத்து பெண்களுக்கும் வாசுதேவநல்லூரில் உள்ள பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் வைத்து சமுதாய வளைகாப்பு நடைபெற்றது
வாசுதேவ நல்லூர் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி சமுதாய வளைகாப்பு நடத்தி வைத்தார்
வாசு தேவநல்லூர் பேரூர் தி.மு.க. செயலாளர் ரூபி ஆ பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார்
இந்நிகழ்வில் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய துணை சேர்மன் சந்திரமோகன், ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், வாசுதேவநல்லூர் பேரூராட்சி உறுப்பினர்கள், உள்ளார் மணிகண்டன், விக்னேஷ் , குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், கழக முன்னோடிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். படம் வாசுதேவநல்லூரில் சமுதாய வளைகாப்பு நடைபெற்றது