BREAKING NEWS

வாசுதேவநல்லூர் ராயகிரிபகுதிகளியில் தொடர்ந்து மாலை நேரங்களில் இடி மின்னலுடன் கோடை மழை பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி விவசாய பணிகளை துவக்கினார்கள்

வாசுதேவநல்லூர் ராயகிரிபகுதிகளியில் தொடர்ந்து மாலை நேரங்களில் இடி மின்னலுடன் கோடை மழை பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி விவசாய பணிகளை துவக்கினார்கள்

தென்காசி மாவட்டம் சிவகிரி ராயகிரி வாசுதேவநல்லூர்பகுதியில் கடந்த 1 வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் மூன்று தினங்களாக சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், ராயகிரி மற்றும் வாசுதேவநல்லூர் பகுதிகளில் மேகமூட்டமாக இருந்தது. தொடர்ந்து ஒரு வார மாலை நேரங்களில் இடி மின்னலுடன் சிவகிரி ராயகிரி. வாசுதேவநல்லூரில் கோடை மழை மழை தொடர்ந்துபெயதது.

இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர் விவசாய பணிகளை துவக்கினார்கள்

கோடையில் வெப்பம் தாங்க முடியாமல் கஷ்டப்பட்டு இருந்த பொதுமக்களுக்கு குளிர்ச்சி தந்தது இருந்த போதிலும் காலை ஓன்பது மணி முதல் கடுமையான கொடுரமான் வெயில் அடித்து கொண்டு இருப்பதால் பகல் நேரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத நிலையில் உள்ளது இதனால் வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் மக்கள் நடமாட்டம் இல்லாத நிலையில் இருந்து வருகிறது

தற்போது நெல் அறுவடை முடிந்து நெல் நடும் நிலையில் விவசாயிகள் தங்கள் விவசாய பணிகளை துவக்கி உள்ளனர் கரும்பு பயிரிட்ட விவசாயிகளுக்கு இந்த மலை நல்ல வரப்பிரசாதமாக அமைந்துள்ளது வயல்கள் மற்றும் காடுகளில் உள்ள கிணறுகளில் நீர் மட்டும் அதிகரித்துள்ளது

மேலும் தொடர்ந்து மழை பெய்து வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது இந்த மழை நீரினை கொண்டு விவசாயிகள் தங்களது விவசாய பணிகளை மகிழ்ச்சியாக துவக்கி உள்ளனர்

படம் சிவகிரி பகுதியில் கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களது விவசாய பணியினை வயல்களில் நாற்றினை நடும் காட்சி

CATEGORIES
TAGS