வேலூரில் லைசென்ஸ் பெறாமல் கந்துவட்டி விடும் தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்: வேலூர் மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?

வேலூர் பிஷப் டேவிட் நகரைச் சேர்ந்தவர் அருள் பிரகாசம். இவர் வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் லைசென்ஸ் ஏதும் பெறாமல் பிஷப் டேவிட் நகர் உள்ளிட்ட சுற்றுப்புறப் பகுதிகளில் கந்து வட்டிக்கு பணம் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இப்படி கொடுத்த பணத்தை வசூல் செய்வதற்காக அப்பாவி மக்களின் வீட்டின் கதவைத் தட்டி அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் அருவெறுக்கத்தக்க வகையில் அவர்களை திட்டுவது, மிரட்டுவது,
அடியாட்களை கொண்டு வந்து பணம் கேட்டு தொந்தரவு செய்வது என்று பல்வேறு விரும்பத்தகாத பணிகளை இவர் செய்து வருகிறார். காரணம் இவரிடம் உள்ள கந்து வட்டி பணம்.
இந்த கந்து வட்டி பணம் குவிவதால் இவர் தான் தோன்றித்தனமாக நடந்து கொள்வதுடன், யாருக்கும் மரியாதையும் கொடுக்காமல் பொதுமக்களை கிள்ளுக்கீரையாக நினைத்துக் கொண்டு செயல்பட்டுக் கொண்டுள்ளார்.
குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் கட்சி பிரமுகர்களை, அரசியல்வாதிகளையும், அத்துடன் அரசியலில் உள்ள எம்எல்ஏக்கள், எம்பிக்களை கையில் வைத்துக்கொண்டு இவர் ஆட்டம் போட ஆரம்பித்துள்ளார்.
இவரை பார்த்தாலே பிஷப் டேவிட் நகரில் உள்ள பொதுமக்கள் அஞ்சி நடுங்குகின்றனர்.
ஏதோ இவர் ஒரு தாதா போல இந்த பகுதியில் வலம் வந்து கொண்டுள்ளார். அதாவது பிஷப் டேவிட் நகரின் டான் வரிசையில் இவரும் இடம் பெற்றுள்ளார்.
தற்போது பிஷப் டேவிட் நகரில் இருந்து புலம் பெயர்ந்து சத்துவாச்சாரி வள்ளலார் பகுதியில் இவர் தனது குடும்பத்தை நகர்த்தி சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இவரது கொட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதால் பொதுமக்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் கந்து வட்டிக்கு பணம் கொடுப்பதோடு மட்டுமின்றி அவர்களது வீடுகளுக்கு சென்று வீட்டை பூட்டி விடுவேன். அவர் செய்யும் தொழிலை முடக்கி விடுவேன் என்று பொதுமக்களை அச்சுறுத்தி மிரட்டி ஆதாயம் பார்த்து வருகிறார் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது.
ஆதலால் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், வேலூர் சரக டிஐஜி தேவராணி ஆகியோர் இவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து உரிமம் இல்லாமல் செய்யும் இந்த கந்து வட்டி தொழில் குறித்து இவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து இவரை கைது செய்து இவரை சட்டத்தின் பிடியில் கொண்டு நிறுத்தி சட்டம் என்ன தண்டனை கொடுக்கிறதோ அதை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று இவரால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.
காவல்துறை தனது கடமையை செய்யுமா? இப்படி ஆட்டம் போடும் டான் போன்றவர்களின் கொட்டத்தை வேலூர் மாவட்ட காவல் துறை அடக்குமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
செய்தி ஆசிரியர் சா.வாசுதேவன்