BREAKING NEWS

வேலூர், குடியாத்தம், வேப்பூரில் பட்டா மாறுதலுக்காக ரூ.10,000 லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ. கோபியை சுற்றி வளைத்த லஞ்ச ஒழிப்பு துறை.

வேலூர், குடியாத்தம், வேப்பூரில் பட்டா மாறுதலுக்காக ரூ.10,000 லஞ்சம் பெற்ற  வி.ஏ.ஓ. கோபியை சுற்றி வளைத்த லஞ்ச ஒழிப்பு துறை.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலூகா வேப்பூரில், விவசாயி விவசாய நிலத்திற்கு பட்டா மாறுதலுக்காக ரூ.10,000 லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ. கோபி என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

விவசாயி நிஜாமுதீன் பட்டாமாறுதல் கோரி விண்ணப்பித்தார். இதற்காக (மார்ச் 18 செவ்வாய்க்கிழமை) லஞ்சம் வாங்கிய போது மறைந்திருந்த வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும்,

களவுமாக கோபிநாத்தை சுற்றி வளைத்து கைது செய்து அவரிடம் இருந்த ரசாயனம் தடவிய பத்தாயிரத்தை பறிமுதல் செய்தனர்.

நீண்ட மற்றும் பல மாதங்களுக்கு பிறகு லஞ்சம் குறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துறையினரை, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

CATEGORIES
TAGS