BREAKING NEWS

வேலூர் தொரப்பாடியில் தையலகத்தில் படுக்கையறை போட்டு நூதன விபச்சாரம்!

வேலூர் தொரப்பாடியில் தையலகத்தில் படுக்கையறை போட்டு நூதன விபச்சாரம்!

வேலூர் தொரப்பாடியில் அரியூர் பிரியும் சாலை எம்ஜிஆர் சிலை அமைந்துள்ள இடத்திற்கு முன்பே தொரப்பாடி சாலையில் தையலகம் ஒன்று உள்ளது.

இந்த தையலகத்தில் துணி தைக்கிறார்களோ இல்லையோ பட்டப்பகலில் விபச்சாரம் கொடி கட்டி பறக்கிறது. விபச்சார அழகிகள் இந்த தையலகத்தில் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை முகாமிட்டு தங்களது தொழிலை எவ்வித இடையூறும் இன்றி அமோகமாக நடத்தி வருகின்றனர். இந்த தையலகத்தின் உரிமையாளர் வேலூர் பாகாயம் சஞ்சீவிபுரத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி என்ற தையல்காரர் ஆவார்.

இந்த தையல் கடையின் பின்பகுதியில் தனியாக அறை அமைத்து அதில் கட்டில் மெத்தை போட்டு தொழிலை அமோகமாக நடத்தி வருகிறார் இந்த சஞ்சீவி புரத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி என்ற தையல்காரர்.

இவரிடம் இப்படி ஒரு நீல நிற ஷட்டரை வைத்துக் கொண்டு பட்டப்பகலில் விபச்சார தொழிலை நடத்தி வருகிறீர்களே உங்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமா? காவல்துறையினரால் என்று கேட்டால் அவர் சொல்வது பாகாயம் காவல்துறையினர் எனது பாக்கெட்டில் உள்ளனர். யாரும் எனக்கு எவ்வித இடையூறும் செய்ய மாட்டார்கள்.

அவர்களுக்கு மாதா மாதம் நான் மாமூல் கொடுத்து விடுகிறேன் என்றும், அத்துடன் விபச்சார அழகிகளையும் அவ்வப்போது விருந்து படைக்கிறேன் என்றும் நா கூசாமல் சொல்லி வருகிறார்.

இதுபோன்ற செய்திகளை வெளியில் சொன்னால் காவல்துறையினருக்கு பொத்துக் கொண்டு கோபம் தான் வருகிறது. இதில் உள்ள சீர்கேடுகளை சீர் தூக்கி பார்க்காமல் காவல்துறையின் நற்பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வரும் இது போன்ற களைகளை களைவதற்கு அவர்கள் முன் வருவதில்லை . ஆக மொத்தத்தில் திமுகவின் முதலமைச்சர் மு. க.ஸ்டாலினின் நற்பெயருக்கு பொற்கால ஆட்சிக்கு இதுபோன்ற களங்கங்கள் ஏற்படுத்தி வருகின்றனர்.

ஆக மொத்தத்தில் காவல்துறையின் மிடுக்கு, அதன் மதிப்பு போன்றவை இது போன்ற சாக்கடைகளால் அதன் மதிப்பு சற்று பொதுமக்கள் மத்தியில் குறையத்தான் செய்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

கண்ணியமிகு காவல்துறையில் பணியாற்றும் வேலூர் சரக டிஐஜி தேவராணி, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் ஆகியோரது அயராத உழைப்புக்கு இது போன்ற களங்கங்கள் ஏற்படாமல் காவல் துறையில் பணியாற்றும் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் மற்றும் அந்தந்த காவல் நிலையங்களில் உள்ள தலைமை காவலர்கள் முதல் காவலர்கள் வரை முழுமூச்சுடன் பணியாற்றி காவல் துறையின் நற்பெயருக்கு களங்கம் வராமல் பணியாற்ற வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

இது போன்ற விரும்பத்தகாத செயல்கள் வேலூர் மாவட்டத்தில் எங்கும் நடைபெறாமல் தடுக்க காவல்துறை முன் வரவேண்டும் என்பதே அனைவரது ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இனி காவல்துறையின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

செய்தி ஆசிரியர் ச வாசுதேவன்

CATEGORIES
TAGS