சொந்த தொகுதியில் போட்டி போட முடியாத அண்ணாமலை தினமும் பொய்களை அள்ளி அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்.

சொந்த தொகுதியில் போட்டி போட முடியாத அண்ணாமலை
தினமும் பொய்களை அள்ளி அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்
துடியலூரில் கனிமொழி எம்.பி பேச்சு
பெ.நா.பாளையம்
கோவை துடியலூர் பகுதியில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி
பிரச்சாரம் செய்தார்.அவர் பேசும்போது தேர்தலில் மக்கள் நலனில் அக்கரையோடு ஆட்சி நடத்தும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு அளியுங்கள் தப்பா போச்சுன்னா தமிழ்நாடு மட்டுமல்ல தேசத்திற்கும் மக்கள் உரிமைக்கும் ஆபத்தாக போகும்.சொந்த தொகுதியில் போட்டி போட முடியாத அண்ணாமலை
தினமும் பொய்களை அள்ளி அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்.
பொய் செய்திகளை போடுவதற்கு என்று பா.ஜ.க வினர் தனி அமைப்பை வைத்துள்ளனர்.தமிழக முதல்வர் கூறியது போல் தேசம் முழுவதும் உரிமையை மீட்க மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம் இந்த தேர்தல் என்பதை மறந்துவிடக்கூடாது.
பாஜகவை சேர்ந்த 44 எம்.பி க்கள் பேரிலிருந்து பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளது.பா.ஜ க ஆட்சியில் பெண்கள் மீதான கொடூரம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. விவசாயிகளுக்கு எதிராக பிஜேபி அரசு இ.டி வழக்கு பதிவு செய்துள்ளது.வழக்குகள் உள்ளவர்கள் பா.ஜ.க வில் போய் இணைந்தால் வாஷிங்மெஷினில் துவைத்த துணி போல் வெள்ளையாக ஆகிவிடுகிறார்கள்.
தேர்தல் பத்திரங்களில் முக்கால்வாசி இவர்கள் பெயரில் தான் வந்துள்ளது.
பிஜேபி எதிர்த்து பேசியதற்காக அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் உள்ளார்.சிஐஏ சட்டத்தை ஆதரித்த அதிமுக அரசு.கடந்த காலங்களில் கூட்டணி வைத்து மக்களுக்கு துரோகம் செய்தது.அதிமுக பா.ஜ.க வும் நாடகம் போடுபவர்கள் நாளை இருவரும் இணைந்து கொள்வார்கள்.உங்களை ஏமாற்றிக்கொண்டு இரண்டு கட்சியினர் ஓட்டு கேட்க வருவார்கள் அவர்கள் திருப்பி அனுப்ப வேண்டும்.சிறு குறுந் தொழில் அதிகம் உள்ள கோவையில் ஜிஎஸ்டி வந்த பிறகு 50 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது.இந்தியா கூட்டணி ஆட்சி மத்தியில் வரும் போது ஜிஎஸ்டிகள் குழப்பங்கள் சரி செய்யப்படும்.விவசாய கடனை ரத்து செய்வதாக ஆட்சியில் அமர்ந்து விட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் கடனை ரத்து செய்துள்ளனர்.60 ஆயிரத்து 700 கோடிக்கு மேல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன்களை ரத்து செய்துள்ளனர்.ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி வரும் போது 500 ரூபாய்க்கு சிலிண்டர் வழங்கப்படும்.மத்தியில் நம் ஆட்சி வந்தவுடன் அனைத்து டோல்கேட்டுகளும் இழுத்து மூடு விழா நடத்தப்படும்.மகளிர் உதவித்தொகை பெரும் ஒரு கோடி பதினைந்து லட்சம் பெண்களில் பெரும்பான்மையானவர்கள் இந்து பெண்கள் தான்.1339 கோவில்களுக்கு திராவிட மாடல் ஆட்சியில் தான் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது.கடவுள் நம்பிக்கை உள்ளதா என்பது முக்கியமல்ல நம்பக்கூடியவர்களை பாதுகாப்பது தான் முக்கியம்.இந்த பகுதியில் உள்ள தண்ணீர் பிரச்சனை தீர்க்க ரூ 778 கோடி ரூபாய் ஒதுக்கி தீர்வு கண்டு வளர்ச்சி கண்டுள்ளது.கோயமுத்தூரில் மிகப்பெரிய நூலகம் அமைக்க திட்டம் இடப்பட்டுள்ளது.திராவிட மாடல் ஆட்சி அம்பானி அதானிக்கான ஆட்சி இல்லை சாதாரண மக்களுக்கான ஆட்சி.இனிமேல் எப்போதும் பா.ஜ.கா மத்தியில் ஆட்சிக்கு வர முடியாது என்ற நிலை உருவாக்கிக் காட்ட இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்று பேசினார்.