தஞ்சை பெரிய கோவிலை எழுப்பி. தஞ்சையை ஆண்ட மாமன்னன் இராஜராஜ சோழன் 1037ம் ஆண்டு சதய விழா மங்கள இசை, திருமுறை அரங்கத்துடன் தொடங்கியது. நகரமே விழாக் கோலம் பூண்டு உள்ளது.
தஞ்சை பெரியக் கோவிலை எழுப்பி தமிழர்களின் கட்டட கலையையும், சிற்ப கலையையும் உலகிற்கு பறைசாற்றி தஞ்சையை ஆண்ட சோழ பேரரசன் இராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தார்.
அவர் பிறந்த தினம் ஆண்டு தோறும் அரசு சார்பாக சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி இரண்டு நாட்கள் நடைபெறும் 1037ம் ஆண்டு சதய விழா மங்கள இசை, திருமுறை அரங்கத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து ராஜராஜ சோழன் புகழை போற்றும் வகையில் கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், பரதநாட்டிய நிகழ்வு நடைபெறுகிறது.
சதய விழாவை ஒட்டி ராஜராஜ சோழன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இராஜராஜன் குருவான கருவூர் சித்தர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன. பெருவுடையாருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டன.
விழாவின் முக்கிய நிகழ்வான மாமன்னன் இராஜராஜன் சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நாளை நடைபெறுகிறது.
அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.
தொடர்ந்து பல்வேறு தரப்பினர் இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். சதயவிழாவை ஒட்டி நாளை தஞ்சைக்கு உள்ளுர் விடுமுறை விடப்பட்டுள்ளது.