திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரம் காட்டி வரும் சூழலில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு சவால் விடும் வகையில் திருப்பூர் சந்திராபுரம் ரோட்டில் அம்மா உணவகத்திற்கு எதிரில் திமுக பிரமுகர் ஒருவர் ரோட்டை ஆக்கிரமித்து ஹோட்டல் திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அடுத்து அதிமுக பாஜகவினர் சார்பிலும் பொதுமக்கள் கலந்து கொள்ளும் உண்ணாவிரதம் போராட்டம் நாளை நடைபெற உள்ளதாக தெரிவித்து ஆக்ரமித்து கட்டப்பட்ட கடைக்கு எதிரில் பேனர் வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பொதுவெளியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள ஹோட்டல் தளபதியார் நாளை திறக்கப்பட உள்ளது இதில் திமுகவின் முக்கிய பொறுப்பாளர்களும் மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.
