மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக பொது மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக பொது மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வானதிராஜபுரத்தை சேர்ந்த மாணவன் ஜெயவசந்தன் கல்வி உதவி கேட்டு, கடந்த வாரம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்திருந்தார்.
மனுவின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒரு வாரக் காலத்திற்குள் அம்மாணவனுக்கு மாவட்ட ஆட்சித்தலைவரின் தன் விருப்ப நிதியிலிருந்து ரூ.23,000-க்கான காசோலையினை அவரின் தாயார் க.சித்ராவிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.லலிதா வழங்கினார்.
அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர்.
CATEGORIES மயிலாடுதுறை
