தேனி, ஓடைப்பட்டி பேரூராட்சியின் அலட்சியத்தால், பறிபோன குழந்தையின் உயிர்.

தேனி மாவட்டம், ஓடைப்பட்டி பேரூராட்சியின் அலட்சியத்தால், பறிபோன குழந்தையின் உயிர்.
தேனி மாவட்டம், சின்னமனூர் அருகேயுள்ள ஓடைப்பட்டி சமத்துவபுரத்தில் வசித்து வருபவர் ரங்கநாதன் இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளார் இவரது மகள் கார்த்திகா கடமலைக்குண்டிலிருந்து கணவர் சரவணக்குமார், குழந்தை ஷாஜினி மற்றும் மகன் ஆகியோருடன் தனது தந்தையைப் பார்க்க ஓடைப்பட்டிக்கு வந்துள்ளார்.
தந்தையை நலம் விசாரித்துக் கொண்டிருந்த நேரத்தில் குழந்தைகள் விளையாடச் சென்றுள்ளார்கள் வெகு நேரமாகியும் குழந்தைகள் வீட்டிற்கு வராததால் வெளியே தேடியுள்ளார். தந்தையின் வீட்டருகே பேரூராட்சி நிர்வாகம் பூங்கா அமைக்க குழி தோண்டியுள்ளது. அந்த குழி மழையினால் தண்ணீர் நிரம்பி காணப்பட்டுள்ளது.
மேட்டுப்பகுதியில் தன் மகள் அணிந்திருந்த செருப்பு கிடந்ததை கண்டுள்ளார் பதட்டத்துடன் ஓடிய தாய் குழந்தை தண்ணீரில் மிதப்பதைக் கண்டு கதறியுள்ளார் இவரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் குழந்தையை தூக்கி, சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கிருந்து தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். அங்கே குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதை உறுதி செய்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் கோட்டாட்சியர் கெளசல்யா, ஏ.எஸ்பி.ஸ்ரேயா குப்தா, வட்டாட்சியர் அர்ச்சுணன், ஆகியோர்கள்,கிராம நிர்வாக அலுவலர் ரங்கசாமியிடம் சம்பவத்தை விசாரித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்க உத்தரவிட்டனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த ஓடைப்பட்டி காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தந்தையைப் பார்க்க வந்து தன் குழந்தையைப் பறிகொடுத்த தாயின் கதறல். ஊர் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
குடியிருப்பு பகுதியில் குழி தோண்டி மழை பெய்தது தெரிந்தும், பேரூராட்சி நிர்வாகம் பாதுகாப்பு வளையமோ, எச்சரிக்கை பலகையோ வைக்காமல் அலட்சியமாக இருந்ததால் குழந்தையின் உயிர் போய் விட்டது என அப்பகுதி மக்கள் பேரூராட்சி மீது குற்றம் சாட்டியுள்ளனர்.