BREAKING NEWS

பாபநாசம் அருகே ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆயிரம் குடும்பங்களுக்கு 30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பாபநாசம் அருகே ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆயிரம் குடும்பங்களுக்கு 30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ரமலான் பண்டிகையை முன்னிட்டு 30 லட்சம் நலத்திட்ட உதவிகள்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள இராஜகிரி பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு சின்ராவுத்தர் டத்தோ சாகுல்ஹமீது சார்பாக 30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பெரிய பள்ளி வாசல் தலைவர் யூசுப்அலி தலைமை வகித்தார் புரவலர்கள் நாசர், கஜ்ஜாலி, கமால்பாட்சா, அப்துல்மாலிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

நிகழ்ச்சியில் ராஜகிரி. பண்டாரவாடை பகுதியை சேர்ந்த
ஏழை. எளிய குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை உள்பட 2 ஆயிரம் மதிப்புள்ள அத்யாவசிய பொருள்கள் வழங்கப்பட்டன.

 

இதில் பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், முஸ்லிம் வெல்பர் அசோஷியேஷன் நிர்வாகிகள். ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர். இறுதியாக வெல்பர் அசோசியேஷன் செயலாளர் முகம்மதுசுல்தான் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை பெரியபள்ளி துணைசெயலாளர் சபீர்அகமது செய்திருந்தார்.

செய்தியாளர் எஸ்.மனோகரன் பாபநாசம்.

Share this…

CATEGORIES
TAGS