BREAKING NEWS

ராகுல்காந்தி எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தேனியில் வரும் 15ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்; காங்கிரஸ் கட்சி.

ராகுல்காந்தி எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தேனியில் வரும் 15ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்; காங்கிரஸ் கட்சி.

தேனி மாவட்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் முருகேசன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பேசிய அவர், மோடி குறித்து பேசியதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. அதோடு அவரது மக்களவை உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டது.‌

 

அதானி குறித்து நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாக ராகுல் காந்தி கேள்வி எழுப்பி வந்ததை பொறுத்துக் கொள்ள முடியாத மோடி அரசின் பழிவாங்கும் செயலாகும். விரைவில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வெற்றி பெறுவோம் என்றார்.

 

மேலும் மோடி அரசின் பழிவாங்கும் செயலை கண்டித்து வரும் ஏப்ரல் 15ஆம் தேதியன்று தேனியில் ரயில் மறியல் போராட்டம் நடத்த இருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 20ஆம் தேதி மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.

 

அதோடு இன்றைய தினம் தமிழகம் வருகை தர உள் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி அல்லது கருப்பு பலூன் காட்டுவது தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்க இருப்பதாக கூறினார்.

Share this…

CATEGORIES
TAGS