மாங்குடி மஹா மாரியம்மன் பத்ர காளியம்மன் ஐயனார் கோயில்களின் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது

மயிலாடுதுறை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி மாங்குடி கிராமத்தில் அருள்பாலித்துவரும் மஹா மாரியம்மன் பத்ர காளியம்மன் ஐயனார் திருக்கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.முன்னதாக காலையில் நான்காவது கால யாகபூஜை துவங்கப்பட்டு பூர்ணாஹுதி தீபாராதனை கடம் புறப்பட்டு ஐயனார் ஆலய கும்பாபிஷேகமும் பின் பத்ர காளியம்மன் கோயில் கும்பாபிஷேகமும் அதனை தொடர்ந்து மஹா மாரியம்மன் விமான மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.கலசத்தில் கொண்டுவரப்பட்ட புனித நீரை ஊற்றி தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு தீர்த்த பிரசாத விநியோகமும் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அன்று இரவு முக்கிய வீதிகள் வழியாக அம்மன் வீதி உலா காட்சியும் நடைபெற்றது.
CATEGORIES மயிலாடுதுறை
