கொள்ளிடம் ஆறு சுற்றுலாத்தளம் அல்ல, செல்ஃபி எடுக்கிறேன் என்று சென்று விலைமதிப்பில்லா உயிரை இழக்கவேண்டாம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேட்டி

கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் செல்வதால் வெள்ள நீர் வரத்து அதிகரித்து வருவதால், வருவாய்துறை அலுவலர்களும், பணியாளர்களும்,ஊரக வளர்ச்சித் துறையும் இரவு பகலாக பாதுகாப்பு குறித்த முன்னேற்பாடுகளில் ஈடுபட்டு விழிப்புணர்வு நடவடிக்கையை எடுத்துவருவதாகவும்,

கொள்ளிடக் கரையோரங்களில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் தங்க 4 இடங்கள் தயாராக உள்ளன அவர்களுக்கு உணவு வழங்கிட தயாராக இருக்கிறோம் என்றவர்
ஆறுகள் சுற்றுலாத்தளங்கள் அல்ல என்றும் செல்ஃபி எடுக்கக்கூடாது என்றும் மேலும் ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் பொதுமக்கள் குளிக்கவும் நீச்சல் அடிக்கவோ கூடாது கால்நடைகளை வாய்க்கால் வழியாக அழைத்துச் செல்லக்கூடாது எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்

CATEGORIES தஞ்சாவூர்
