விருதுநகர் மாவட்டத்தில்10 துணை தாசில்தார்கள் பதவி இறக்கம், கலெக்டர் மேகநாதரெட்டி உத்தரவிட்டார்.

விருதுநகர் மாவட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 10 துணை தாசில்தார்களை முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் நிலைக்கு பணி இறக்கம் செய்து கலெக்டர் மேகநாதரெட்டி உத்தரவிட்டார்.
வருவாய்த்துறையில்குரூப் 2 தேர்வெழுதி நேரடி உதவியாளர்களாகவும் வருவர். இதே நிலைக்கு இளநிலை உதவியாளர், தட்டச்சு பணியின் மூலம் பதவி உயர்வு பெற்றவர்களும் உதவியாளர்களாக வருவர்.
இரு தரப்பினரும் பதவி உயர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதற்கான தீர்ப்பில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணியின் மூலம் கொடுக்கப்பட்ட பதவி உயர்வில் பட்ட படிப்பு முடித்தவர்கள் நேரடி உதவியாளர்களுக்கு இணையாகவும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும், பட்டப்படிப்பு இல்லாதவர்கள் நிரப்பப்பட்ட இடம் போக மீதமுள்ள காலி இடம் இருந்தால் மட்டுமே பதவி உயர்வு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இதே போல் நேரடி உதவியாளர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களில் ரேங்கிங் சிஸ்டம் முறையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடுத்த வழக்கிலும் முறைப்படி ரேங்கிங் சிஸ்டத்தை பின்பற்றுமாறு தீர்ப்பு வழங்கப்பட்டது.
பதவி உயர்வு தீர்ப்பு அடிப்படையில் 6 பேரும், ரேங்கிங் சிஸ்டம் தொடர்பான தீர்ப்பில் 4 பேர் என 10 பேர் பதவி இறக்கப்பட்டனர்.
விருதுநகர் துணை தாசில்தார் (கனிமம்) திருக்கண்ண முனியாண்டி,
வத்திராயிருப்பு மண்டல துணை தாசில்தார் காளிராஜன்,
வத்திராயிருப்பு தேர்தல் துணை தாசில்தார் முனியாண்டி,
சாத்துார் மண்டல துணை தாசில்தார் முத்துலெட்சுமி,
அருப்புக்கோட்டை தலைமையிடத்து துணை தாசில்தார் அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்துார் தேர்தல் துணை தாசில்தார் சசிகலா,
அருப்புக்கோட்டை மண்டல துணை தாசில்தார் முருகன்,
வெம்பக்கோட்டை மண்டல துணை தாசில்தார் அகஸ்தீஸ்வரன், தேர்தல் துணை தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோர் முதுநிலை வருவாய் ஆய்வாளர்களாகவும், விருது நகர் தலைமையிடத்து துணை தாசில்தார் நாகேஷ் தலைமை கணக்கராகவும் பணி இறக்கம் செய்து கலெக்டர் மேகநாதரெட்டி உத்தரவிட்டார்.