BREAKING NEWS

Go back Rahul Gandhi என்ற கோஷத்துடன் தஞ்சை ரயில் நிலையம் முன்புராகுல் காந்தி உருவ பொம்மையை எரிக்க முயற்சி, 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

Go back Rahul Gandhi என்ற கோஷத்துடன் தஞ்சை ரயில் நிலையம் முன்புராகுல் காந்தி உருவ பொம்மையை எரிக்க முயற்சி, 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

Go back Rahul Gandhi என்ற கோஷத்துடன் தஞ்சை ரயில் நிலையம் முன்பு கருப்பு பலூன் பறக்க விட முயன்றதோடு ராகுல் காந்தி உருவ பொம்மை எரிக்க முயன்ற 10 பேர் கைது செய்யப்பட்டனர்

 

 

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3500 கி.மீ. தூரத்திற்கு ராகுல் காந்தி பாதயாத்திரை செல்கிறார். இன்று மாலை அவரது பாதயாத்திரை தொடங்குகிறது. இதனை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

 

 

இந்த நிலையில் ராகுல்காந்தி தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை ரயிலடியில் இந்து மக்கள் கட்சியினர் கருப்பு பலூன் பறக்க விட முயன்றனர். உடனே போலீசார் விரைந்து வந்து பலூன்களை பறிமுதல் செய்தனர்.

 

இதனைத் தொடர்ந்து கோ பேக் ராகுல் காந்தி என்ற பதாகையுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ராகுல் காந்தி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். மேலும் ராகுல் காந்தி உருவ பொம்மையை எரிக்க முயன்றனர் இதை அடுத்து 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )