BREAKING NEWS

விவசாயிகளுக்கு எதிரான ஒன்றிய மோடி அரசை அகற்றுவதற்கு உறுதியான போராட்டத்தை முன்னெடுப்போம்! ஏ எம் கோபு அவர்களின் பத்தாவது ஆண்டு நினைவு நாளில் உறுதியேற்பு!!

விவசாயிகளுக்கு எதிரான ஒன்றிய மோடி அரசை அகற்றுவதற்கு உறுதியான போராட்டத்தை முன்னெடுப்போம்! ஏ எம் கோபு அவர்களின் பத்தாவது ஆண்டு நினைவு நாளில் உறுதியேற்பு!!

தஞ்சாவூர் மாவட்டம்,

தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு எதிரான ஒன்றிய மோடி அரசை அகற்றுவதற்கு உறுதியான போராட்டத்தை முன்னெடுப்போம்! சுதந்திர போராட்ட வீரர், பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தலைவர் ஏ எம் கோபு அவர்களின் பத்தாவது ஆண்டு நினைவு நாளில் உறுதியேற்பு!!

 

சுதந்திர போராட்ட வீரர் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தோழர்,ஏ ஐ டி யூ சி சங்கத்தின் மூத்த தலைவர் ஏ.எம்.கோபு அவர்கள் 10 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி தஞ்சாவூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக ஏஐடியூசி சங்க மாநில பொருளாளர் தி.கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது.

 

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் நிலவுடமை ,பண்ணை ஆதிக்கத்தில் இருந்த மக்களின் சுயமரியாதைக்காக, சாணிப்பால், j சவுக்கடிக்கு எதிராக போராடியவர். திமுக ஆட்சி காலத்தில் கடந்த. 1.3 .1972 இல் தனியார் பேருந்துகள் அரசுடமையாக்கப்பட்ட போது எஸ் எம் டி தனியாரின் பேருந்தில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் வேலை இழந்த நிலையில் ஏ.எம்.கோபு அவர்கள் தலைமையேற்று,

பெரும் போராட்டத்தை நடத்தி சுமார் 600 தொழிலாளர்களுக்கு சோழன் போக்குவரத்து கழகத்தின் வேலை வாங்கித் தந்தவர், அதே போல நுகர் பொருள் வாணிப கழகத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் வேலையிழக்கும்.

 

 

அபாயம் ஏற்பட்ட பொழுது தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி பணி நிரந்தரம் பெற்று தந்து பாதுகாத்தவர், தொழிற்சங்க உரிமைகளை பெற்றுத் தந்தவர்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலே விவசாயிகளுக்காக நடைபெற்ற நில மீட்பு போராட்டத்தில் தலைமையேற்று போராடியவர்,

உழைக்கும் மக்களின் வாழ்க்கை தரம் உயர்வதற்கு எண்ணற்ற போராட்டங்களை நடத்தியவர், சோசலிச சமூகத்தை படைப்பதற்கு வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு மறைந்தவர், இறந்த பிறகு சென்னை மருத்துவக்கல்லூரிக்கு தனது உடலை தானமாக அளித்த பெருமைக்குரியவர். ஏ.எம்.கோபு .

  அவர்களின் நினைவுநாளில் மக்கள் விரோத, தொழிலாளர்கள், விவசாயிகள் விரோத ஒன்றிய அரசை அகற்றுவதற்கு உறுதியான போராட்டத்தை முன்னெடுக்க உறுதி ஏற்கப்பட்டது. நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட பொருளாளர் என், பாலசுப்பிர மணியன்,

மாநகர செயலாளர் ஆர். பிரபாகரன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் சங்கத்தின் மாநில தலைவர் அ. சாமிக்கண்ணு ,, ஏ ஐ டி யு சி மாவட்டச் செயலாளர் ஆர்.தில்லைவனம், மாவட்ட தலைவர் வெ.சேவையா, மாவட்ட துணைச் செயலாளர் துரை. மதிவாணன், நுகர்பொருள் வாணிபக் கழக சங்க நிர்வாகிகள் எஸ்.தியாகராஜன், நாடியப்பன், செல்வம்,

 

அரசு போக்குவரத்து சங்க நிர்வாகிகள் சி.ராஜமன்னன் , என். ஆர். செல்வராஜ், எம்.தமிழ்மன்னன், ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகிகள் கே.சுந்தர பாண்டியன், எம். மாணிக்கம், பி.குணசேகரன், டாஸ்மாக் சங்க நிர்வாகிகள் எஸ்.கோடீஸ்வரன், செழியன்,திலகர்,

 

மின்வாரிய சம்மேளன மாநில துணைத்தலைவர் பொன்.தங்கவேல், நிர்வாகிகள் கோதண்டபாணி, ராஜகோபால், கட்டுமான சங்க செயலாளர் பி.செல்வம், உடல் உழைப்பு சங்க நிர்வாகிகள் சுதா, பரிமளா, ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் இரா.செந்தில்நாதன், சமூக ஆர்வலர் விசிறி சாமியார் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )