ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் திமுக அதிமுக , தேமுதிக உறுப்பினர்கள் காராச்சார வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் திமுக அதிமுக , தேமுதிக உறுப்பினர்கள் காராச்சார வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு,
சேலம் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய குழுக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழு தலைவர் டாக்டர் பத்மினி பிரியதர்ஷினி செழியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது, இதில் கூட்டத்தில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அப்போது தொடர்ந்து நடைபெற்றக் கூட்டத்தில் 13வது வார்டு தேமுதிக உறுப்பினர் முருகன் அவர்கள் என்னுடைய வார்டு பகுதிக்கு எனக்கு தெரியாமல் நிதி ஒதுக்கியதாக தீர்மானத்தில் உள்ளது என்றும் என்னுடை பகுதிக்கு என்னென்ன குறைகள் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குதான் தெரியும் நீங்களே எப்படி நிதி ஒதுக்கீடு செய்தீர்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.

அதைத்தொடர்ந்து அதிமுக உறுப்பினர் சித்ரா அவர்கள் எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை இருப்பதால் பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் மற்றும் பெண்களுக்கும் போதை ஆசாமிகள் சாலையோர பகுதியில் இடையூறு ஏற்படுத்தி வருவதாகவும் உடனடியாக அந்த டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கடந்த மாத கூட்டத்தில் இதே கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் தலைவர் மற்றும் திமுக உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது ஒன்றிய குழு தலைவர் பத்மினி பிரியதர்ஷினி அவர்கள் உங்கள் கோரிக்கையை மனுவாக வழங்க வேண்டும் என்றும் உடனடியாக அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,

மேலும் அனைத்து ஒன்றிய குழு உறுப்பினர்களும் அவர்கள் பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் கோரிக்கை மனுவாக அழிக்க வேண்டும் என்றும் அதற்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் இங்கு கட்சி பாகுபாடு இன்றி அனைத்து உறுப்பினர்களுக்கும் வரும் நிதியை சமமாக ஒதுக்கீடு செய்து உள்ளோம் என தெரிவித்தார்.
மேலும் அனைத்து உறுப்பினர்களும் கருத்து வேறுபாடு இன்றி ஒற்றுமையாக மக்களுக்கு பணியாற்றுவோம் என்றும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
