சினிமா
கே.ஜி.எஃப் 2 படத்தின் ராக்கி பாய் கேரக்டர், என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ஒருவரின் வாழ்க்கைக் கதையில் இருந்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பிரசாந்த் நீல் இயக்கியுள்ள படம், ‘கே. ஜி. எஃப்: சாப்டர் 2’. யாஷ், ராக்கி பாய் என்ற கேரக்டரில் மிரட்டலாக நடித்திருக்கிறார். அவரது ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ஈஸ்வரி ராவ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் கடந்த 14-ம் தேதி வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் இந்தப் படம் வரவேற்பை பெற்றுள்ளது. வசூல் சாதனைப் படைத்து வருகிறது.
CATEGORIES Uncategorized
