திருப்பூர்: நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி (16, 17) இன்றும் நாளையும் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் வேலை நிறுத்தம்.
திருப்பூர்: நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி (16, 17) இன்றும் நாளையும் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் வேலை நிறுத்தம்.

திருப்பூர்: நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி (16, 17) இன்றும் நாளையும் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் வேலை நிறுத்தம். நாள் ஒன்றுக்கு 250 கோடி ரூபாய் உற்பத்தி பாதிப்பு. 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பு. 20 ஆயிரம் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது.

நூல் விலை 480 ரூபாய் என வரலாறு காணாத உச்ச நிலையை அடைந்துள்ளது இதனால் பின்னலாடை மற்றும் ஜவுளி உற்பத்தி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் மத்திய அரசு நூல் மற்றும் பருத்தி ஏற்றுமதி தடை செய்து அறிவிக்க வேண்டும் என கோரி இன்றும் நாளையும் பின்னலாடை உற்பத்தியாளர்களின் அனைத்து சங்கங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
இதன் காரணமாக திருப்பூரில் உள்ள 20 ஆயிரம் பனியன் நிறுவனங்கள் மூடப்படுகிறது 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் நாளொன்றுக்கு 250 கோடி ரூபாய் மதிப்பிலான பனியன் உற்பத்தி பாதிப்பு. இந்த வேலை நிறுத்தத்திற்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் விசைத்தறி நிறுவனங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
