தேர் விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து 17 நாட்களுக்குப் பிறகு பூஜை
தேர் விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து 17 நாட்களுக்குப் பிறகு பூஜை.


தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் 94 வது ஆண்டு அப்பர் தேர் திருவிழா கடந்த 26ந் தேதி இரவு தொடங்கியது .27ந்தேதி அதிகாலை மின் கம்பியில் உரசி விபத்து ஏற்பட்டது .இதில் 11 பேர் பலியாகினர் .மேலும் 14 பேர் காயமடைந்தனர் .


இதையடுத்து பல்வேறு அரசியல் தலைவர்கள் ,ஆன்மிகவாதிகள் ,ஆதீனங்கள் உள்ளிட்டோர் கிராம மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.விபத்து நடத்த தேரிலேயே ஐம்பொன்னாலான அப்பர் சிலையும் ,300 ஆண்டு பழமையான ஓவியமும் சேதம் இல்லாமல் இருந்த நிலையில்18 நாட்களுக்குப் பிறகு தேரில் இருந்த அப்பர் சிலைக்கு விக்னேஸ்வர பூஜை,சங்கல்பம் ,புண்யாகவாசனம் ,மகாலட்சுமி பூஜை,அஷ்டதிக் பூஜைகள் பிரேவசபலி செய்து அப்பர் சிலையை மடத்திற்கு கொண்டு வந்தனர் .


பின்னர் அப்பர் சிலைக்கு பரிகார பூஜை செய்யப்பட்டது.தொடர்ந்து 16 மங்கல பொருட்களால் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டு,தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் கிராம மக்கள் அப்பர் சாமியை கோவிலை சுற்றி வலம் வந்து தேவாரம் திருவாசகம் பாடி வழிபட்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
