BREAKING NEWS

இன்று கப்பலில் நிவாரணப்பொருட்கள்!! ஸ்டாலின் கொடியசைத்து துவங்கி வைப்பு!!

இன்று கப்பலில் நிவாரணப்பொருட்கள்!! ஸ்டாலின் கொடியசைத்து துவங்கி வைப்பு!!

நிவாரணப் பொருட்கள்

தமிழர்கள் வசித்து வரும்  இலங்கையில் கடும்  பொருளாதார நெ ருக்கடி நிலவி வருகிறது. இதனால் அங்கு போராட்டங்களும், ஊரடங்கு உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. அத்தியாவசிய பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இலங்கைக்கு உலகம் முழுவதிலும் இருந்து நிவாரணப் பொருட்கள் குவிந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தமிழகத்திலிருந்தும் நிவாரணம் வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.

 

அதன்படி தமிழக முதல்வர்  மக்களிடையே தாராளமாக நிதி அளிக்கும் படி வேண்டுகோள் விடுத்திருந்தார்.   இலங்கை மக்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.80 கோடி மதிப்புள்ள 40 ஆயிரம் டன் அரிசி, ரூ.15 கோடி மதிப்பிலான 500 டன் பால் பவுடர், ரூ.28 கோடியில் 137 வகையான உயிர்காக்கும் அத்தியாவசிய மருந்து பொருட்கள் அனைத்தும் இன்று தமிழகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படுகின்றன.

கப்பலில் நிவாரண பொருட்கள்

இந்த பொருட்களை டான் பின்-99’ என்ற கப்பல் சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு கொண்டு செல்கிறது.  இந்த கப்பலில் கடந்த 2 நாட்களாக மருந்து பொருட்கள், பால் பவுடர்கள், நிவாரண பொருட்கள் கிரைன் உதவியுடன் கப்பலில் ஏற்றப்பட்டு வருகின்றன. மருந்து பொருட்களை பொருத்தவரையில் முதல் கட்டமாக ரூ.8.88 கோடி அத்தியாவசிய மருந்துகளும், 2 சிறப்பு மருந்துகளும் 700 அட்டை பெட்டிகள் மூலம் கப்பலில் கொண்டு செல்லப்படுகின்றன.மேலும் 15 கிலோ எடை கொண்ட பால் பவுடர்கள் சுமார் 200 டன் வரை ஏற்றப்பட்டு உள்ளது.

50 கிலோ எடையுள்ள அரிசி பைகள் 5000  டன் அளவுக்கு ஏற்றப்பட்டு உள்ளது. கப்பலில் இருக்கும் இடத்தை பொறுத்து நிவாரணப்பொருட்கள் ஏற்றப்படுகிறது. கப்பலில் நிவாரணப்பொருட்கள் ஏற்றும் பணி இன்று மே 18ம் தேதி புதன் கிழமை  பகலில் நிறைவடையும். அதன்பிறகு  மாலை 5 மணிக்கு சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கை கொழும்பு துறைமுகத்திற்கு ‘டான் பின்-99’ கப்பல் புறப்படுகிறது. இதனை முதல்வர் கொடியசைத்து வழியனுப்பி வைக்கிறார். சென்னை துறை முகத்தில் கப்பல் குறித்த  ஆவணங்கள் சரிபார்ப்பு  போன்ற நடைமுறை பணிகள் நிறைவு செய்த பிறகு  சென்னை துறைமுகத்தில் இருந்து இந்த கப்பல் புறப்படும். அடுத்த 44 மணி நேரத்தில் கொழும்பு துறைமுகத்தை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )