காட்பாடி வட்டாச்சியர் அலுவலகத்தில் இரண்டாவது நாள் ஜமாபந்தி.
காட்பாடி வட்டாச்சியர் அலுவலகத்தில் இரண்டாவது நாள் ஜமாபந்தி.

காட்பாடி வட்டாச்சியர் அலுவலகத்தில் இரண்டாவது நாள் ஜமாபந்தி நடைபெற்றது நரிக்குறவர் குடும்பத்திற்கு நலத்திட்ட உதவிகளை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் வழங்கினார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டாச்சியர் அலுவலகத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று 2-வது நாளாக வருவாய்தீர்வாய ஜமாபந்தி நடைபெற்றது இதில் காட்பாடி வட்டாச்சியர் ஜெகதீஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர் இதில் பட்டா பெயர் மாற்றம் வீட்டுமனை பட்டா புதிய ரேஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு மனுக்களையும் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் அவர்களிடம் அளித்தனர் மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார் இதனை தொடர்ந்து வன்றந்தங்கள் பகுதியில் வசித்து வரும் இருபத்தி ஒன்பது நரிக்குறவர் குடும்பத்தினருக்கு தலா 5 கிலோ அரிசி பிளாஸ்டிக் வாலி பாய் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார் நிகழ்ச்சியில் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் வேண்டா, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் செந்தாமரை, வருவாய் ஆய்வாளர் தீனதயாளன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
