BREAKING NEWS

மயிலாடுதுறை  மேலப்பாதி நடுக்கரை கிராமத்தில் வசிக்கும் விளிம்பு நிலை மக்களுக்கு குடும்ப அட்டை வழங்கிட கணக்கெடுப்பு பணி…

மயிலாடுதுறை  மேலப்பாதி நடுக்கரை கிராமத்தில் வசிக்கும் விளிம்பு நிலை மக்களுக்கு குடும்ப அட்டை வழங்கிட கணக்கெடுப்பு பணி…

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, மேலப்பாதி நடுக்கரை கிராமத்தில் வசிக்கும் விளிம்பு நிலை மக்களுக்கு குடும்ப அட்டை வழங்கிட கணக்கெடுப்பு பணி.

பொருளாதாரத்தில் விளிம்பு நிலையில் வசித்து வரும் மக்களுக்கு அனைத்து அரசு நலத்திட்டங்களும் கிடைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவின் பேரில் இன்று தரங்கம்பாடி வட்டம், மேலப்பாதி நடுக்கரை கிராமத்தில் காவிரிக்கரை ஓரத்தில் வசித்துவரும் குடும்ப அட்டை இல்லாத உரிக்கார நாயக்கர் மற்றும் குறவர் சமூக மக்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கும் பொருட்டு தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் பாபு கணக்கெடுப்பு செய்தார். இதில் ஆறு குடும்பங்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கிடவும், சுமார் 12 குடும்ப உறுப்பினர்கள் பெயர் சேர்க்கப்படாமல் இருந்ததை அவரவர் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்திட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )