BREAKING NEWS

மதுபானங்களின் விலை அதிரடி உயர்வு!

மதுபானங்களின் விலை அதிரடி உயர்வு!

துணிகரம்! டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் கொள்ளை!

தெலுங்கானா மாநிலத்தின் வருவாயை அதிகரிக்கும் நோக்கத்தில் மது பானங்களின் விலையை 20 முதல் 25 வரை அதிரடியாக உயர்த்தி உள்ளது.  இந்த திடீர் விலை உயர்வு அறிவிப்பால் அம்மாநில மதுப்பிரியர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

தெலுங்கானாவில் விற்கப்பட்டு வரும் அனைத்து வித மதுபானங்களின் விலையையும் அம்மாநில அரசு அதிரடியாக உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வின் மூலமாக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி முதல் 7 ஆயிரம் கோடி வரையிலான வருவாய் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு புல் எனப்படும் 1 லிட்டர் மதுபாட்டின் விலை தற்போது ரூ.495 ஆக  உள்ளது. அதன் விலை ரூ.120 அதிகரித்து ரூ.615 ஆக விற்பனை செய்யப்படுகிறது.   மேலும் 250 மில்லி லிட்டரான குவாட்டர் மதுபாட்டில் ரூ.20 கூடுதலாக வைத்து விற்கப்படுகிறது. அனைத்து வகையான பீர் பாட்டில்களும் குறைந்தபட்சமாக ரூ.10 விலை உயர்ந்துள்ளது.

இந்த திடீர் விலை உயர்வால் மதுப்பிரியர்கள் கவலை அடைந்துள்ளனர். 20 முதல் 25 சதவீதம் வரை விலை உயர்வு காரணமாக தெலுங்கானா மாநிலத்தின் வருவாய் உயரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இருந்தும் மதுப்பிரியர்களின் மது வாங்கும் அளவு இந்த விலை உயர்வால் குறையுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )