அத்துமீறி தென்னை மரங்கள் வெட்டி சாய்ப்பு குடியாத்தம் பிடிஓ, வட்டாட்சியர் அடாவடி உத்தரவு!
அத்துமீறி தென்னை மரங்கள் வெட்டி சாய்ப்பு குடியாத்தம் பிடிஓ, வட்டாட்சியர் அடாவடி உத்தரவு!

அத்துமீறி தென்னை மரங்கள் வெட்டி சாய்ப்பு குடியாத்தம் பிடிஓ, வட்டாட்சியர் அடாவடி உத்தரவு!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, அக்ராவரம் அஞ்சல்,மீனூர் கிராமத்தைச் சேர்ந்த குமாரசாமி மகன் கு.சேகர். இவருக்கு சொந்தமான பட்டா நிலம் சர்வே எண்: 63/7, 62க்கு இடையில் 63/5ல் சுமார் 30 சென்ட் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை பட்டா நிலத்துடன் சேர்த்து 50 தென்னை மரங்களை வைத்து சுமார் 30 ஆண்டுகளாக அனுபவித்து வந்தார். இந்நிலையில் மீனூர் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக ஒன்றிய துணை செயலாளர் தேவிகா, காங்.,முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜே.வி.வேலாயுதம், மற்றும் அகரஞ்சேரி டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் ரமேஷ், விற்பனையாளர் முருகன், வெங்கடேஸ்வர பெருமாள் கோயில் டிக்கெட் விற்பனையாளர் சம்பத், இளையகுமாரன், ஜெயகாந்தன்பாபு, ஓய்வு பெற்ற விஏஓ இளங்கோ, தட்டப்பாறையில் இருந்து அக்ராவரம் சென்று சிப்பந்தி பணியாற்றும் துரைராஜ் உள்ளிட்ட பலர் இவருடன் சேர்ந்து கொண்டு கடந்த 13.09.2019 அன்று குடியாத்தம் வட்டாட்சியராக இருந்த சாந்தி என்பவர் துணையோடு இரவோடு இரவாக 50க்கும் மேற்பட்ட பச்சை தென்னை மரங்களை ஜேசிபி கொண்டு வந்து வெட்டி சாய்த்தனர்.

பச்சை மரங்களை வெட்டி சாய்க்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்று தெரியவில்லை. வெங்கடேஸ்வர பெருமாள் கோயிலுக்கு முன்புறம் ஒரு வழி உள்ளது. அத்துடன் இந்த 30 சென்ட் இடத்தை வழங்கி பின்பக்கம் நுழைவு வாயில் அமைத்து ஒரு வழியும் உள்ளது. இப்படி முன்னும் பின்னும் பக்தர்கள் செல்ல வழி இருந்தும் மூன்றாவது வழி தேவையற்றது. இதற்கு அப்போதைய வட்டாட்சியராக இருந்த சாந்தி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வழி அமைக்கவும், தென்னை மரங்களை வெட்டி அப்புறப்படுத்தவும் உத்தரவிட்டது அவரது தான்தோன்றித்தனத்தை வெளிக்காண்பித்துள்ளது. தென்னை மரங்கள் அப்புறப்படுத்தப்பட்ட இடத்தில் மண் சாலை அமைத்தனர். இரவு வேளையில் தென்னை மரங்களை அராஜகமாக அப்புறப்படுத்தியவர்கள் மீது துறை ரீதியான விசாரணை இதுவரை நடத்தப்படவே இல்லை. அப்படி என்ன அவசியம் வந்தது என்று தெரியவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த வேலை நடந்துள்ளது வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த பணியை தடுக்க முயன்ற சேகர் மற்றும் அவரது ஆதரவாளர்களை அடியாட்களை வைத்தும், காவல் துறையை ஏவல் துறையாக மாற்றி மிரட்டி தாக்குதல் நடத்த முயற்சி செய்துள்ளார்கள். குதல் நடத்த முயற்சி செய்துள்ளார்கள். இது குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்தும் இன்றுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாவட்ட ஆட்சியருக்கு தவறான தகவல்களை வட்டாட்சியர் அனுப்பியுள்ளதே குழப்பத்துக்கு காரணமாகும்.

தற்போதுள்ள மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்துக்கு நேரில் சென்று ஸ்தல ஆய்வு செய்து உண்மை நிலையை உணர்ந்து மேல்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட சேகரின் எதிர்பார்ப்பாக உள்ளது. அடுத்தவர் சொத்தை அபகரிப்பதே பலரது வேலையாக உள்ளது மீனூர் கிராமத்தில் என்று சொன்னால் அது மிகையாகாது. இது தொடர்பாக குடியாத்தம் நீதிமன்றத்தில் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது. குடியாத்தம் சார்பு நீதிமன்றம் ஓ.எஸ்.259/2019, குடியாத்தம் சார்பு நீதிமன்றம் ஓ.எஸ்.303/2019, குடியாத்தம் முன்சீப் கோர்ட் ஓ.எஸ்.133/2021 என்று 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதேபோன்று சேகரின் பட்டா நிலத்தில் அங்கன்வாடி கட்டடம் கட்ட தூண்டுகோலாக இருந்துள்ளார்.

தேவிகா. கான்கிரீட் பவர் பிளாக் மூலம் சாலை அமைக்கின்றனர். இப்படி அதிகார துஷ்பிரயோகம் நடக்கிறது. வருவாய்த்துறையினர் மற்றும் பிடிஓ அலுவலகத்தில் பணம் கையூட்டு பெற்றுக் கொண்டு இப்படி நடந்து கொள்கின்றனர். இது மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனுக்கு தெரியுமா? தெரியாதா? என்று தெரியவில்லை. இதுதொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவு (செல்), வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது தென்னை மரங்கள் வெட்டப்பட்டது கோர்ட் அவமதிப்பு ஆகும்.

இதற்கு உரிய துறைகளை சார்ந்தவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவர்களை பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். ஆனால் அதற்கும் நடவடிக்கை இல்லை. கடந்த 23.07.2021 அன்று இது இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த பிரச்னை என்றும் இருதரப்பும் நீதிமன்றம் சென்று பிரச்னையை தீர்த்து கொள்ளுமாறு அறிவுறுத்தியும், காவல் துறை தலையிட்டு நடவடிக்கை எடுக்க இயலாது என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் மீண்டும் 31.03.2022 முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு அனுப்பிய புகார் நிலுவையில் உள்ளது. தவறான உத்தரவு பிறப்பித்து தென்னை மரங்களை வெட்ட உதவிய குடியாத்தம் பிடிஓ யுவராஜ், வட்டாட்சியர் சாந்தி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மரங்களை வெட்டியவர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாத வகையில் சட்டம் தனது கடமையை செய்ய வேண்டும். குடியாத்தம் வட்டாட்சியர்கள் தவறான தகவல்களை மவட்ட ஆட்சியருக்கு அனுப்பி குழப்பி வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சாந்திக்கு பிறகு வத்சலா வட்டாட்சியராக வந்தார். அவரும் இதே பதில் கூறியது ஏற்புடடையதாக இல்லை.

தற்போதுள்ள பிடிஓ கார்த்திகேயன், இந்து சமய அறநிலையத்துறை வட்டாட்சியர் லலிதா போன்றோர் இந்த வழியே எங்களுக்கு தேவையில்லை என்று சொல்கின்றனர். இப்படி நிலைமை இருக்கும் போது பட்டா நிலத்தில் சாலை அமைத்தது மட்டுமின்றி அங்கன்வாடி கட்டடம் ஒன்று இருக்கும் போது மேலும் ஒரு கட்டடம் கட்டுவது வீண்வம்புக்கு அழைப்பது போன்று உள்ளது. எதையும் கேட்க ஆள் இல்லை என்றால் தனி நபரின் சொத்துக்களை அரசியல் பலம், ஆள் பலம், பண பலம் கொண்டு மிரட்டி ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இதற்கு தமிழக வருவாய்த்துறை அமைச்சரும், உள்ளாட்சி துறை அமைச்சரும், வேலூர் மாவட்ட ஆட்சியரும் நல்லதொரு முடிவை பாதிக்கப்பட்ட சேகருக்கு தருவார்களா? இல்லை இவர்களும் கண்டும் காணாமல் அமைதி காப்பார்களா? அல்லது நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வரையில் காத்திருக்க வேண்டியதுதானா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் அதிகாரிகள் சொல்லும் தவறான தகவல்களை கேளாமல் நேரடியாக சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டால் உண்மை நன்கு விளங்கும். மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனாவது பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் வழங்குவாரா என்பது போகப் போகத்தான் தெரியும்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
