BREAKING NEWS

தாயின் கள்ளக்காதலன் மனைவி மற்றும் உறவினர்கள் திட்டியதால் மனமுடைந்த இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை.

தாயின் கள்ளக்காதலன் மனைவி மற்றும் உறவினர்கள் திட்டியதால் மனமுடைந்த இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள நஞ்சமடைகுட்டை பகுதியைச் சேர்ந்த தவசி இவரது மனைவி வளர்மதிக்கும் அதே பகுதியை சேர்ந்த குருசாமி என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குருசாமி மற்றும் வளர்மதி ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர் இதனைத்தொடர்ந்து குருசாமியின் மனைவி ராசாத்தி மற்றும் அவரது உறவினர்கள் தவசி வீட்டிற்குச் சென்று தவசி மற்றும் தவசி என் மகள் சத்யா ஆகிய இருவரையும் தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர் இதனால் மனமுடைந்த சத்தியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கோரி தவசி மற்றும் அவரது உறவினர்கள் அந்தியூர் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர் பின்னர் அந்தியூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக அவர்களை கைது செய்வதாக தெரிவித்து தொடர்ந்து சாலைமறியல் கைவிடப்பட்டது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )