BREAKING NEWS

பிறந்தநாள் கேக் சாப்பிட்ட சிறுமி பலி!!

பிறந்தநாள் கேக் சாப்பிட்ட சிறுமி பலி!!

அபிராமி

ராணிபேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தாஜ்புராவைச் சேர்ந்தவர் கவிதா என்பவரின் மகள் அபிராமி (16). இவரது தந்தை கார்த்திகேயன் இறந்துவிட்டதால் அவரது தாயின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். 3 ஆண்டுகளுக்கு முன்பு தோப்புகானாவில் உள்ள அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு வரை படித்துவந்த இவர், தந்தையின் மறைவுக்கு பின்னர் பள்ளிப்படிப்பை நிறுத்தியுள்ளார்.

கேக்

இந்த நிலையில், கடந்த 18-ம் தேதி தனது நெருங்கிய தோழியின் பிறந்தநாள் விழாவிற்கு சென்ற அபிராமி, அங்கு கேக் சாப்பிட்டு விட்டு இரவு வீடு திரும்பி உள்ளர். வீட்டிற்கு வந்த சிறு நேரத்தில் வயிறு வலிப்பதாக தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து தாய் கவிதா மகளுக்கு சோடா வாங்கி கொடுத்துள்ளார்.

அதை வாங்கி குடித்துவிட்டு உறங்கிய அபிராமி மறுநாள் (மே 19) காலை வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆற்காடு தாலுகா காவல்நிலைய எஸ்ஐ சரவணன், அபிராமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

அதிகளவு நிறமிகள் சேர்க்கப்பட்ட கேக்கை அபிராமி சாப்பிட்டதால் புட் பாய்சன் காரணமாக உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், பிரேத பரிசோதனைக்கு பிறகே அபிராமியின் உயிரிழப்புக்கான முழுமையான காரணம் தெரியவரும் என்று கூறப்படுகின்றது.

மேலும், அபிராமியுடன் கேக் சாப்பிட்ட மற்றவர்களின் உடல்நிலை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அதே சமயத்தில், கேரளாவில் ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்த மாணவியின் அறிகுறிகள் அபிராமியின் மரணத்திலும் காணப்படுவதாக தெரிகிறது.அதையடுத்து வட்டார உணவு பொருள் பாதுகாப்பு மற்றும் கலப்பட தடுப்பு அதிகாரிகள் அந்த கேக்கை தயாரித்த கடை குறித்து விசாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )