BREAKING NEWS

தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

The price of jewelery gold in Chennai declined by Rs.360 per sovereign and  sales up to Rs.28,776 | சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360  குறைந்து ரூ.28,776க்கு விற்பனை

தங்கம் விலை மீண்டும் அதிகரித்துள்ளது இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. பங்கு சந்தையில் கடந்த வாரம்  மட்டுமே இந்திய முதலீட்டாளர்கள் சுமார் 7 லட்சம் கோடி ரூபாயை இழந்திருக்கிறார்கள். பங்கு சந்தையின் சரிவு காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச் சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் தங்கள் முதலீடுகளை மாற்றி வருகின்றனர். தங்கத்தின் விலை நாளுக்கு நாள் போக்கு காட்டி வருகிறது. அக்‌ஷய திருதியையன்று குறைந்த தங்கத்தின் விலை, அதன் பிறகு பெரியளவில் குறையவில்லை. தொடர்து கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது. தங்கம் விலையானது வாரத்தின் முதல் நாளான திங்கள் முதல் விலை ஏற்ற இறக்கத்துடனே இருந்து வந்த நிலையில், மீண்டும் தங்கம் விலை அதிகரித்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64-க்கு உயர்ந்து விற்பனை ஆன நிலையில், நேற்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 31 ரூபாய் உயர்ந்து, ரூ.4,786-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரனுக்கு 248 ரூபாய் உயர்ந்து, ரூ.38,288-க்கு விற்பனையானது. 18 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3,920-க்கு விற்பனையாகிறது.

நேற்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலை கிலோவுக்கு 900 ரூபாய் உயர்ந்து, ரூ.65,900-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஒரு கிராம் வெள்ளி ரூ.65.90-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,670 ஆகவும், டெல்லியில் ரூ.4,670 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,670 ஆகவும் இருக்கிறது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )