உடுமலை நாராயணகவி 41 வது நினைவு அஞ்சலி.
உடுமலை நாராயணகவி 41 வது நினைவு அஞ்சலி.
உடுமலை நாராயண கவிராயரின் 41 வது நினைவு நாள் அஞ்சலி நிகழ்ச்சி உடுமலை நாராயணகவி மணி மண்டபத்தில் நடந்தது.
உடுமலை நாராயணகவி இலக்கிய பேரவை சார்பில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் கவிராயரின் பேரன் வக்கீல் சுந்தரராஜன் முன்னிலை வகித்தார் பேரவை தலைவர் அமிர்த நேயன் வரவேற்றார்.
உடுமலை நகர மன்ற தலைவர் மு. மத்தீன் மற்றும் துணைத்தலைவர் சு.கலைராஜன் நகராட்சி ஆணையர் ப. சத்திய நாதன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மண்டபத்தில் அமைந்துள்ள நாராயணகவியின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் குலமுரசு ஆசிரியர் முனைவர் துரை அங்குசாமி அரசு வழக்கறிஞர் சேதுராமன் கிருஷ்ணசாமி ஆர் வி எஸ் ஆறுமுகம் விக்னேஷ் எழில் குமரன் ஓய்வுபெற்ற வட்டாட்சியர் நடராஜன் ஆனந்தகுமார் முருகானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.