சாக்கடை அடைப்பை அகற்ற தானியங்கி எந்திரம்.
சாக்கடை அடைப்பை அகற்ற தானியங்கி எந்திரம்.

உடுமலை நகராட்சியில் முதல் முறையாக அறிமுகம்
உடுமலை நகராட்சியில் பாதாள சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு நகரில் பல இடங்களில் கழிவு நீர் வழிந்தோடுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாகவே பல இடங்களில் கழிவுநீர் வெளியேறுவதாக பொது மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்தநிலையில் சாக்கடை அடைப்பை நீக்க சேம்பர்களில் மனிதர்கள் இறங்குவதை தவிர்க்கும் வகையிலும் பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்ய அடைப்புகளை நீக்கி கழிவுகளை வெளியேற்றும் வகையிலும் ரோபோட்டிக் எனும் தானியங்கி இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது.
உடுமலை நகர்மன்றத் தலைவர் மற்றும் நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் நகர்மன்றத் துணைத் தலைவர் கலைராஜன் கவுன்சிலர்கள் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் பரிசோதித்து பயன்பாட்டிற்கு விடப்பட்டது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
