செங்கம் அருகே சாலையோரம் கொட்டப்படும் கோழி கழிவுகளால் துர்நாற்றம் வீசி நோய் தொற்று ஏற்படும் அபாயம் கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகம்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட மில்லத் நகர் அருகே பேரூராட்சி நிர்வாகத்தால் சுத்தம் செய்யப்பட்ட பகுதி குப்பை கொட்டாதீர்கள் மீறினால் அபராதம் மற்றும் தண்டனை விதிக்கப்படும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருக்கும் இடத்தில் தினந்தோறும் இறைச்சிக்காக கறிக்கோழி விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் கறிக்கோழியை சுத்தம் செய்யும் கழிவுகளை செங்கத்தில் இருந்து போளூர் செல்லும் சாலை ஓரம் மற்றும் நீர்நிலை பகுதியில் அருகாமையில் கொட்டுவதால் துர்நாற்றம் வீசி நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் இதனை சற்றும் கண்டுகொள்ளாமல் பேரூராட்சி நிர்வாகம் மெத்தனப் போக்கில் செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.




நாளுக்கு நாள் புதிது புதிதாக நோய் தொற்று ஏற்பட்டு வரும் நிலையில் கோழி கழிவுகளை சாலையோரம் கொட்டிக் கிடப்பதை கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகத்தின் மெத்தனப்போக்கால் ஏதாவது புதிய வகை தொற்றுக் ஏற்படுமா என அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.
