BREAKING NEWS

தமிழக அரசு 40 ஆண்டு காலத்தில் இல்லாத வரலாற்றை ஓராண்டு காலத்தில் செய்துள்ளதாக தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.

தமிழக அரசு 40 ஆண்டு காலத்தில் இல்லாத வரலாற்றை ஓராண்டு காலத்தில் செய்துள்ளதாக தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.

தமிழக அரசு 40 ஆண்டு காலத்தில் இல்லாத வரலாற்றை ஓராண்டு காலத்தில் செய்துள்ளதாக தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திருவெறும்பூர் அருகே கும்பக்குடி பகுதியில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார்.

திருவெறும்பூர் அருகே உள்ள கும்பகுடியில் வக்பு வாரியத்திற்கு உண்டான 7 ஏக்கர் இஸ்லாமிய நல்வாழ்வு கழகம் என்ற பெயரில் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த ஏழை எளிய மற்றும் ஆதரவற்றவர்களுக்கு வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனிடையில் சிலர் இந்த நிலத்தை விற்பனை செய்துள்ளனர். இதற்கு தடை வாங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதனை ஆக்கிரமித்து பிளாட் போட்டு விற்க முயற்சி செய்வதோடு அதில் வீடு கட்டுவது மசூதி கட்டுவது என்றுகூறி வாக் போர்டின் அனுமதி பெறாமல் இஸ்லாமியர் நலவாழ்வு கழகம் என்ற பெயரில் பெயர் பலகை வைத்து 90 வீட்டு மனைகளை பிரித்துள்ளனர்.

இந்த நிலையில் இது குறித்து வக்பு வாரியம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் தகவல் கொடுத்துள்ளனர்.
அதன் அடிப்படையில் செஞ்சி மஸ்தான் நேற்று சம்பவ இடத்தை நேரில் ஆய்வுசெய்தார்.

அப்போது வக்பு வாரிய இன்ஸ்பெக்டர் ஜெய்துலாபுதீனிடம் செஞ்சி மஸ்தான் இதுகுறித்து கேட்டதோடு அங்கு வைக்கப்பட்டிருந்த போர்டை எதற்காக அகற்றவில்லை என்றும் இதை அகற்றி கொண்டு போய் வக்பு வாரிய அலுவலகத்தில் வைப்பதுடன் இந்த இடத்தில் வக்பு வாரிய பலகையை கொண்டுவந்து வைக்கவேண்டும் என்றும் அதை சேதப்படுத்தினால் அவர்கள் மீது புகார் கொடுக்க வேண்டும்.மேலும் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது புகார் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செஞ்சி மஸ்தான் கூறியதாவது

முன்னோர்கள் சமுதாயத்தின் நலன் கருதி கொடுத்த சொத்து இதுவாகும் இதில் வாதி பிரதிவாதி உரிமைப் பிரச்சினையை கடந்து நீதிமன்ற வழிகாட்டுதல் வழங்கப்பட்டு இஸ்லாமிய ஏழை, எளிய மக்கள், விதவைகள் மற்றும் விதவைகளின் மகள்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தரை வாடகைக்கு அனுமதி கொடுக்கப்படும் என்றும் சில பேர் ஒன்றுகூடி இஸ்லாமியர்கள் நலச்சங்கம் என்று சொன்னால்தான் நம்புவார்கள் என்று விற்பனை செய்ய பிளாட் போட்டு உருவாக்கியுள்ளனர்.

இது நிர்வாக கவனத்திற்கும் தனக்கும் வந்ததாகவும் அதன் அடிப்படையில் ஆய்வு செய்து இந்த இடம் மீட்கப்பட்டுள்ளது என்றும் எந்த நோக்கத்திற்காக முன்னோர்கள் கொடுத்தார்களோ அது நிறைவேற்றப்படும் என்றும் இதைத்தான் தமிழக அரசு கூறி உள்ளது என்றார்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள வக்பு வாரிய சொத்துகளை மீட்டு என்ன நோக்கத்திற்காக கொடுக்கப்பட்டதோ அதை செய்யப்படும் என்றும் மேலும் இந்த இடத்தின் தன்மை அறிந்து இதில் யார் பயன் பெறுவார்கள் என்பதை பின்னர் அறிவிப்பேன் என்று கூறினார்.

மேலும் கடந்த காலத்தில்வக்பு வாரிய ஆக்கிரமிப்பு குறித்து புகார் மனு பெற்றதற்கு உரிய ரசீது கொடுக்காததால் யாரும் புகார் கொடுத்து அதற்குரிய ஆதாரங்கள் இல்லாததால் நீதிமன்றத்தை கூட அணுக முடியவில்லை தற்போது புகார் மனுக்கள் பெறப்பட்டு அதற்குரிய ரசீதுகள் வழங்கப்படுவதுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வக்பு சொத்து சட்ட திட்டிங்களுக்கு உட்பட்டு வக்பு செய்கிறது.

வாரியத்திற்கு வழங்கப்பட்டுள்ள சொத்து எந்த நோக்கத்திற்காக ஒப்படைக்கப்பட்டு உள்ளது என்பதை கண்காணிப்பது தான் அரசின் பணி அதை ஆக்கிரமிப்பு என்று சொல்லிவிடமுடியாது மூன்றாவது நபர் ஆக்கிரமித்தால் தான் அது ஆக்கிரமிப்பு என்றும் சில இடங்களில் நிர்வாக சீர்திருத்தமும்,
சில இடங்களில் ஆக்கிரமிப்பும் செய்யப்பட்டு
கையகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் நூற்றுக்கணக்கான சொத்துக்களை இதுபோல் மீட்டு உள்ளதாகவும் 40 ஆண்டு கால வரலாற்றில் இல்லாததை ஓராண்டு காலத்தில் செய்துள்ளதாகவும் இந்த பணி தொடர்ந்து நடைபெறும் என்று கூறினார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )