பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சியின் அம்பை தொகுதி கமிட்டி கூட்டம்.

திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சியின் அம்பை தொகுதி கமிட்டி கூட்டம் அதன் முன்னால் தொகுதி செயலாளர் செய்யது இப்ராஹீம் தலைமையில் பத்தமடையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொது செயலாளர் களந்தை மீராசா மற்றும் அம்பை தொகுதி பொருப்பாளரும் மாவட்ட செயலாளருமான கல்லிடை சுலைமானும் கலந்து கொண்டனர், கூட்டத்தில் , அம்பை தொகுதியின் தலைவராக செய்யது இப்ராகிம், மற்றும் செயலாளராக முகம்மது யாசரும் தேர்வு செய்யப்பட்டனர், மேலும் புதிய கமிட்டியின் நிர்வாகிகளுக்கு மாவட்டத்தின் சார்பாக வாழ்த்துகள் வழங்கபபட்டன, மேலும் அடுத்து வருக்கூடிய வருடத்தின் இலக்கை பற்றி விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது. இதில் தொகுதி துணை செயலாளர் சிந்தா கொடி, அசன் காதர் ஆகியோர் கலந்து கொண்டனர் இருதியில் அம்பை தொகுதி செயலாளர் யாசர் நன்றியுரையாற்றினர்.
CATEGORIES Uncategorized
