BREAKING NEWS

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு கிராமத்தில் ஓராசிரியர் பள்ளிகள் மாணவர்களுக்கு கோடை விடுமுறையை பயனுள்ளதாக போக்க பாரதியார் கவிதைகள் போட்டி நடத்தியது.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு கிராமத்தில் ஓராசிரியர் பள்ளிகள் மாணவர்களுக்கு  கோடை விடுமுறையை பயனுள்ளதாக போக்க  பாரதியார் கவிதைகள் போட்டி நடத்தியது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகள் திறந்து மாணவர்கள் கற்றலில் நாட்டம் இல்லாமல் இருந்தனர், அவர்களை மீண்டும் கற்றலில் நாட்டத்தை செலுத்த செய்து அவர்களை திறம்பட கொண்டு வருவதற்குள் கோடை விடுமுறை விடப்பட்டது ஆகையால் மீண்டும் மாணவர்கள் கற்றலில் பின்நோக்கி செல்வார்கள் என்ற அச்சம் பெற்றோரிடத்தில் ஏற்பட்டது அதனை போக்கும் வகையில் மாணவர்களுக்கு ஓராசிரியர் பள்ளிகள் பல்வேறு கிராமங்களில் பல்வேறு போட்டிகளை நடத்தி வருகின்றனர். அவ்வகையில் இன்று திருவாலங்காடு கிராமத்தில் அரசு மாதிரி தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு ஓராசிரியர் பள்ளிகள் பாரதியார் கவிதைகள் போட்டி நடத்தியது. இதில் 213 மாணவர்கள் கலந்து கொண்டனர், அதிலிருந்து இறுதி சுற்றுக்கு 35 மாணவர்கள் தேர்வாகி அவர்கள் பாரதியாரின் கவிதைகளை கவிதை நடையிலும் பாடல்களும் பாடினர். இவ்விழாவிற்கு திருவாலங்காடு வட்டார கல்வி அலுவலர் திருமதி.லட்சுமி தலைமை ஏற்க, ஓராசிரியர் பள்ளிகளின் கெளரவச் செயலாளர் திரு.கிருஷ்ணமாச்சாரி அவர்கள் முன்னிலையில் போட்டி நடைபெற்றது. ஓராசிரியர் பள்ளிகள் சார்பில் ஓராசிரியர் பள்ளிகளின் தலைமை நிர்வாகி Dr.கிருஷ்ணன் ,திட்ட ஒருங்கினைப்பாளர் ராஜ்குமார், ஆய்வு ஒருங்கிணைப்பாளர் சிவராமகிருஷ்ணன், சபரி முத்து, மகேஷ்,சத்யா, புகழேந்தி, கிருஷ்ணமூர்த்தி, சதீஸ், துரைபாபு மற்றும் ஆச்சாரியாக்கள் கலந்து கொண்டனர் . போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )