தென்பொதிகை வாலிபர் சங்கம் மற்றும் குருமலை புதூர் ஊர் மக்கள் இணைந்து நடத்தும் முதலாம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டியை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குருமலைபுதூரில் தென்பொதிகை வாலிபர் சங்கம் மற்றும் குருமலைபுதூர் ஊர் மக்கள் இணைந்து நடத்தும் முதலாம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சில்லவார் குல இராஜகம்பள நாயக்கர் சமுதாயத்தில் உள்ள 10 அணிகள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றனர்.

ஒவ்வொரு அணியும் 6 ஓவரில் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த மாபெரும் கிரிக்கெட் போட்டியை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தார்.


நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர் வண்டானம் கருப்பசாமி, மேலப்புதூர் கிளைச் செயலாளர் தங்கபாண்டியன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் போர்டு சாமி,முருகன்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
