44 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!! தமிழக அரசு அதிரடி!!

தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சாதனை விளக்க கூட்டங்கள் நடைபெறும் அதே நேரத்தில் நிர்வாகத்தில் பல அதிரடி மாற்றங்களும் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக 44 ஐபிஎஸ் அதிகாரிகள் இன்று அதிரடியாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டதற்கான அறிவிப்பை அரசாணையாக வெளியிட்டுள்ளது.மொத்தம் 44 ஐபிஎஸ் அதிகாரிகளை திடீர் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாநகர காவல் ஆணையராக பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் நெல்லை மாநகர காவல் ஆணையராக அவினாஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வடக்கு மண்டல ஐஜியாக தேன்மொழி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக மகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.

