BREAKING NEWS

நகராட்சிகளில் சிவகங்கை நகராட்சியின் சிறப்பான திட்டம் பிறப்பு இறப்பு சான்றிதழ் பதிவு செய்து 24 மணி நேரத்தில் வழங்கப்படுகிறது.

நகராட்சிகளில் சிவகங்கை நகராட்சியின் சிறப்பான திட்டம் பிறப்பு இறப்பு சான்றிதழ் பதிவு செய்து 24 மணி நேரத்தில்  வழங்கப்படுகிறது.

நகராட்சிகளில் சிவகங்கை நகராட்சியின் சிறப்பான திட்டம் பிறப்பு இறப்பு சான்றிதழ் பதிவு செய்து 24 மணி நேரத்தில் வழங்கப்படுகிறது நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த தகவல் சிவகங்கை ஜூன் 9 தமிழகத்தில் 138 நகராட்சிகளில் சிவகங்கை நகராட்சியில் சிறப்பான திட்டமான பிறப்பு-இறப்பு பதிவு செய்த 24 மணி நேரத்தில் இல்லம் தேடி சான்றிதழ் வீட்டில் அளிக்கும் திட்டம் சிவகங்கை நகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வருவதாக நகர்மன்றத் தலைவர் துரை ஆனந்த் சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார்.

சிவகங்கை நகராட்சியில் புதிய சிறப்பு திட்டமாக பிறப்பு இறப்பு பதிவு செய்த 24 மணி நேரத்தில் இல்லம் தேடி சான்றிதல் கிடைக்கிற திட்டத்தை சிவகங்கை நகராட்சியில் தொடங்கியிருக்கிறோம். இன்றையதினம் 58 நபர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பதிவு செய்து நான்கு மாதம் ஐந்து மாதம் ஆறு மாதம் என்று மக்கள் காத்துக்கிடக்கும் காலமாக இருந்தது .தற்போது தமிழக முதல்வர் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் வழிகாட்டுதல்படி சிவகங்கை நகராட்சியில் 24 மணி நேரத்தில் பிறப்பு சான்றிதழ் இறப்பு சான்றிதழ் வழங்கும் திட்டத்தை தொடங்கி இருக்கிறோம் .இது தமிழகத்தில் 138 நகராட்சிகளில் சிவகங்கை நகராட்சி முதன் முதலாக தொடங்கி இருக்கிறோம் என்று அவர் கூறும்போது தெரிவித்தார் .இத்திட்டத்தால் சாதாரண ஏழை எளிய மக்கள் காலதாமதம் இல்லாமல் பிறப்பு இறப்பு சான்றிதழ் பெறுவதற்கு அதற்குரிய நடவடிக்கையை சிவகங்கை நகராட்சி நிர்வாகம் எடுத்து செயல்படுத்தி வருகிறோம். நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் இத்தகவலை தெரிவித்தார் உடன் நகராட்சி ஆணையர் பாஸ்கரன் நகராட்சி பொறியாளர் பாண்டிச்சேரி ,நகர்மன்ற துணைத்தலைவர் கார்வண்ணன்,நகர்மன்ற உறுப் பினர்கள்ஆகியோர் உடனிருந்தனர். படம் சிவகங்கை நகராட்சியில் பதிவு செய்த 24 மணி நேரத்தில் சான்றிதழ் வழங்கப்பட்டது சான்றிதழைப் பெற்றுக் கொள்ளும் பெண்மணி.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )