BREAKING NEWS

அருவி ஓடையில் குளித்தபோது பாறை மீது மோதி இளைஞர் பலி!

அருவி ஓடையில் குளித்தபோது பாறை மீது மோதி இளைஞர் பலி!

வேலூர் அருகே அருவி ஓடையில் சறுக்கி விளையாண்ட போது பாறையில் மோதி இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் விருதம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கனிபாட்ஷா. இவரது மகன் முக்தியர். இவர் நேற்று தனத நண்பர்களுடன் அமிர்தி பூங்காவிற்கு சென்றுள்ளார். பின்னர் ஜமுனாமுத்துர் செல்லும் சாலையில் உள்ள அருவிஓடையில் நண்பர்களுடன் சேர்ந்து குளித்துள்ளார். அப்போது, அருவில் பாறையில் சறுக்கி விளையாடி உள்ளார்.அப்போது, எதிர்பாராத விதமாக அவர் தவறி விழுந்து பாறை மீது மோதினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த முக்தியார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )