BREAKING NEWS

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் ஈஷா யோகா மையம் சார்பில் மண் வளம் பாதுகாப்பு குறித்து மாபெரும் விழிப்புணர்வு வாகன பேரணி

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில்  ஈஷா யோகா மையம் சார்பில் மண் வளம் பாதுகாப்பு குறித்து மாபெரும் விழிப்புணர்வு வாகன பேரணி

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் ஈஷா யோகா மையம் சார்பில் மண் வளம் பாதுகாப்பு குறித்து மாபெரும் விழிப்புணர்வு வாகன பேரணி வரும் 18ஆம் தேதி தேஜஸ் நகராட்சி மஹாலில் நடைபெற உள்ளது இதில் உடுமலைப்பேட்டை சுற்றியுள்ள அனைத்து கிராம விவசாயிகளும் பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும் என ஈஷா யோகா மையம் சார்பில் லட்சுமி ஜுவல்லரி மேல்மாடியில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

மண் வளம் பாதுகாப்போம் என்பது குறித்து ஈஷா யோகா மைய பொறுப்பாளர் கிருஷ்ணகுமார் விளக்கஉரை அளித்தார் பின்பு மண் வளம் பாதுகாப்பு குறித்த குறும்படம் அனைவருக்கும் காட்டப்பட்டது இதில் ஒவ்வொரு நொடியும் ஒரு ஏக்கர் நிலத்தின் மண் பாலைவனம் ஆகிறது 62% மண்வளம் கிட்டத்தட்ட அழிந்துவிட்டது இந்தியாவில் விளையும் காய்கறிகளில் 60% ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது இந்தியாவின் விவசாய நிலங்களில் கிட்டத்தட்ட 25% பாலைவனமாக மாறி வருகிறது எனஅவர் தெரிவித்தார் .

மேலும் சத்குரு தொடங்கியுள்ள மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவாகவும் அதற்கான விழிப்புணர்வு பிரச்சார பயணம் களுக்காகவும் உடுமலைப்பேட்டையில் இருந்து பல்வேறு பொதுநல அமைப்புகளின் சார்பில் மாபெரும் வாகன பேரணி வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ளது எனவும் இதற்கு அனைத்து பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் ஆதரவு தரவேண்டும் வாகன பேரணியில் கலந்து கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டனர் .

உலக அளவில் கவனம் ஈர்த்து வரும் மண் காப்போம் இயக்கத்திற்கு இதுவரை 74 நாடுகள் ஆதரவு அளித்துள்ளது மேலும் ஐநாவின் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளும் சர்வதேச விஞ்ஞானிகள் உட்பட பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வந்துள்ளனர் இதேபோல் தமது பகுதியிலும் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு தரவேண்டும் எனஈஷா யோகா மையம் சார்பில் பொறுப்பாளர் கிருஷ்ணகுமார் லட்சுமி ஜுவல்லரி உரிமையாளர் சிபி சக்கரவர்த்திமேலும் பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (1)
  • comment-avatar
    Kk 4 years

    உடுமலை அனைத்து பொது நல அமைப்புகளும் இணைந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மண் காப்போம் இயக்கம் சார்பாக பேரணி கருத்தரங்கம் நடத்துவது சிறப்பு

  • Disqus ( )