BREAKING NEWS

மத்திய அரசில் 10,00,000 பேருக்கு வேலை வாய்ப்பு.

மத்திய அரசில் 10,00,000 பேருக்கு வேலை வாய்ப்பு.

திட்டங்கள் எல்லாம் மக்களுக்காகவே வகுக்கப்படுகின்றன. ஆனால், அது சரியாக மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறதா? என்கிற கேள்வி பன்னெடுங்காலங்களாகவே இருந்து வருகின்றன. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா சொன்ன குட்டி கதை தான். ஒரு பெரிய ஐஸ் கட்டி எப்படி ஒவ்வொருவராக கைமாறி சென்று, கடைசி கட்டத்தை அடையும் போது, வெறும் உருகிய தண்ணீராய் மீதம் இருக்கிறதோ அதைப் போலவே அதிகாரிகள் இருந்து வருகிறார்கள்.

அதிகாரிகளின் வீடுகளும், உறவினர்களும் மட்டுமே அரசால் பயனடைகிறார்கள். மக்களுக்கான திட்டங்கள் மக்களைச் சென்றடையவில்லை. இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அளவில் வேலைவாய்ப்பை உருவாக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், படித்த இளைஞர்களுக்கு இந்த அறிவிப்பு போய் சேர்ந்ததா என்றே தெரியவில்லை.

அடுத்த 18 மாதங்களில் அதாவது  ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படும்.. இது குறித்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர்  மோடி தெரிவித்திருந்தார். எத்தனைப் பேர் இதற்கு தங்களைத் தயார் படுத்திக் கொள்கிறார்கள்? எத்தனைப் பேர் தமிழகத்தில் இருந்து இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பார்கள்? என்பதெல்லாம் ஆட்சியாளர்களின் கைகளில் தான் உள்ளது.

பற்றாக்குறை குறித்து ஆய்வு நடத்தப்பட வேண்டும்  அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை மத்திய அரசு பணியில் பணியமர்த்த தேர்வு செய்யப்படுவர் எனவும் பிரதமர்  தெரிவித்திருந்தார். இதுகுறித்து பல்வேறு தரப்பட்ட  விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில்,  சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘பிரதமரின் 10 லட்சம் பேருக்கு வேலை – 18 மாத காலக் கெடு அறிவிப்பானது 2014 ல் சொன்ன 2 கோடி வேலை வாய்ப்புகள் போன்ற அறிவிப்பாகி விடக்கூடாது. இந்த வாக்குறுதியை மீண்டும் இன்னொரு ஜும்லாவாக மாறிவிடக்கூடாது. மாநில அளவிலும், மாநில மொழி அறிவு அடிப்படையிலும் அறிவிப்பினை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார். வாய்ப்புகள் நிறையவே கொட்டி கிடக்கின்றன. ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதை மக்களிடம் சென்றடையச் செய்யாமல் இருக்கும் போக்கு, மாநில அரசில் மட்டும் என்றில்லாமல், கட்சி பேதமில்லாமல் இந்தியா முழுவதுமே விரவி கிடக்கிறது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )