BREAKING NEWS

10ம் வகுப்பு மாணவியை கடத்திய மர்ம கும்பல் சுற்றி வளைத்து தூக்கிய காவல்துறை.

10ம் வகுப்பு மாணவியை கடத்திய மர்ம கும்பல் சுற்றி வளைத்து தூக்கிய காவல்துறை.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  வடமதுரை பகுதியில் கடந்த வாரம் 10ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் திடீரென்று மாயமாகி உள்ளார். மகளை காணவில்லை என்று பதறிப்போன பெற்றோர், வடமதுரை காவல்நிலையத்தில் இது குறித்து புகார் கொடுத்துள்ளனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். முதல்கட்ட விசாரணையில், வேடசந்தூர் அருகே உள்ள பூசாரி கவுண்டனூர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் மாணவியிடம் அடிக்கடி பேசி வந்தது தெரிந்தது. அதைத்தொடர்ந்து வேடசந்தூர் விரைந்த போலீசார் நடத்திய விசாரணையில், அவரது பெயர் வீரமணிகண்டன் என்று தெரிய வந்தது.

15 வயதான 10ம் வகுப்பு படித்து வந்த மாணவியை வீரமணிகண்டன் திருமண ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றதுடன், திருமணமும் செய்துள்ளது தெரிந்து அதிர்ச்சியடைந்தனர்.திருமணம் முடித்த பின்னர் வீரமணிகண்டன், தனது உறவினர் வீட்டில் மாணவியை மறைத்து வைத்திருந்ததையும் கண்டுபிடித்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் வீரமணிகண்டன் உள்ளிட்ட அவருக்கு உடந்தையாக இருந்த வேல் முருகன், குமாரவேல் என மொத்தம் 3 பேரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து 15 வயது சிறுமியை கடத்திய வழக்கி திருமணம் செய்த வழக்கில் வீரமணிகண்டன் மீதும், துணையாக இருந்த 2 நண்பர்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். மாணவியை மீட்டு அவரது பெற்றோரிடம் போலீசார்  ஒப்படைத்தனர். மாணவி ஒருவர் கடத்தி திருமணம் செய்யப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )